Studio Lewiis & Stage Lab தயாரிப்பில், Shahjath Hudha இயக்கத்தில் உருவாகியுள்ள இலங்கைத் தமிழ் திரைப்படமான ‘ஆரோஹி’ (Aarohi) தனது மூன்றாவது சிறப்புக் காட்சியை Nelson Theatre-ல் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இச்சிறப்புக் காட்சியில் சினிமா ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் படக்குழுவினரின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு ‘ஆரோஹி’ குழுவினருக்கு தங்களது ஆதரவை வழங்கினர்.
அடுத்து முக்கிய நகரங்களில் ‘ஆரோஹி’
இதுவரை நடைபெற்ற சிறப்புக் காட்சிகளைத் தொடர்ந்து, ‘ஆரோஹி’ திரைப்படத்தை அடுத்தகட்டமாக கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களிலுள்ள திரையரங்குகளுக்குக் கொண்டு செல்ல படக்குழு தயாராகி வருகிறது.
திரையரங்குகள், வெளியீட்டுத் திகதிகள் மற்றும் காட்சி நேரங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.
Shahjath Hudha இயக்கி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் Jeneeshya கதாநாயகியாக நடித்துள்ளதுடன், Aathish AK இசையமைத்துள்ளார்.
‘ஆரோஹி’ திரைப்படத்தின் பயணத்திற்கு ஆதரவளித்த ரசிகர்கள், கலைஞர்கள், ஊடக நண்பர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் Nelson Theatre நிர்வாகத்தினருக்கு படக்குழு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனது திரையரங்குப் பயணத்தை விரிவுபடுத்தி வரும் ‘ஆரோஹி’ படக்குழுவினருக்கு Thirai Murasu குழுவின் வாழ்த்துக்கள்!









கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்