Azonway Pictures தயாரிப்பில் இயக்குநர் லீ முரளியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் சர்வதேசத் தரத்தில் தயாராகி வரும் 'க்ரே' (GREY - The Shades of Humans) திரைப்படத்தில் இலங்கையின் முன்னணி நடிகர் இம்ரான் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அவரை வரவேற்கும் "Welcome On Board" போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
'க்ரே' — மனிதர்களின் நிழல் நிஜங்களை பேசும் படைப்பு...
"The Shades of Humans" என்ற துணைத் தலைப்புடன் தயாராகும் இந்தத் திரைப்படம், மனித மனங்களின் பலவிதமான பரிமாணங்களையும் இருண்ட பக்கங்களையும் பேசும் தீவிரமான கதைக்களத்தை கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகிறது. இம்ரான் ஏற்றுள்ள 'ஜோசப்' கதாபாத்திரம் கதையின் முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நடிகை உடாரி வர்ணகுலசூரியா 'ஷாரா' கதாபாத்திரத்தில் இணைந்துள்ள நிலையில், இப்போது இம்ரான் 'ஜோசப்' ஆக களம் இறங்கியுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
படைப்பில் பங்களித்தவர்கள்...
எழுத்து & இயக்கம் — லீ முரளி, தயாரிப்பு நிறுவனம் — Azonway Pictures (செல்வின் தாஸ்), இசை — ஹிப் ஹாப் சங்கீ, கேமரா & படத்தொகுப்பு — கதிர்.
இலங்கைத் தமிழ் சினிமாவை சர்வதேச அளவிற்கு உயர்த்தும் நோக்கில் தயாராகி வரும் 'க்ரே' திரைப்படத்தில் இணைந்துள்ள நடிகர் இம்ரான் அவர்களுக்கும் இயக்குநர் லீ முரளி மற்றும் Azonway Pictures படக்குழுவினர் அனைவருக்கும் ThiraiMurasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!





கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்