இலங்கைத் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் Yuktha Production-இன் புதிய திரைப்படமான 'அஞ்சுவர்' — நுவரெலியாவின் அழகிய மலைத்தோற்றங்களை பின்னணியாகக் கொண்டு நடைபெற்ற படப்பிடிப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான பிரத்யேக புகைப்படங்கள் இப்போது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளன.
தயாரிப்பாளர் கஜன் கந்தசாமி...
Yuktha Production நிறுவனர் மற்றும் தயாரிப்பாளரான கிங் கஜன், புதிய திறமைகளுக்கு வாய்ப்பளித்து தரமான படைப்புகளை உருவாக்குவதில் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறார். இலங்கைத் தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் அவரது தொடர்ச்சியான பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. 'அஞ்சுவர்' திரைப்படமும் அந்த தரமான பயணத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
திறமையான குழு...
இயக்குநர் பிரகாஷ் ராஜாவின் இயக்கத்தில், ஒளிப்பதிவாளர் ஏ.கே. கமல், இசையமைப்பாளர் பிரஷாந்த் கிருஷ்ணபிள்ளை, படத்தொகுப்பாளர் நிவேன் சந்திரசேகர், கலை இயக்குநர் வி.எஸ். சிந்து என திறமையான கலைஞர்களின் கூட்டணியில் இந்தத் திரைப்படம் வடிவம் பெற்றுள்ளது. இயக்கக் குழுவில் RDK மற்றும் இப்ஹாம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். விளம்பர வடிவமைப்பை ராஜீவன் தயாபரன் உருவாக்கியுள்ளார்.
விரைவில் திரையரங்கில்...
இறுதிக்கட்ட Post Production பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், 'அஞ்சுவர்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்கவுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
'அஞ்சுவர்' படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் வாழ்த்துக்கள்! இந்தப் படம் திரையரங்கில் வெற்றிகரமாக வரட்டும்!







கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்