100 நாட்களை வெற்றிகரமாக கடந்து நிற்கும் 'அந்தோனி' திரைப்படம், இன்னும் தன் பயணத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. திரையரங்கில் பார்வையிடாத மக்களுக்காகவும், பெருந்தகைகளுக்காகவும், பல்கலைக்கழக மாணவர்களுக்காகவும் Projector மற்றும் LED Panel ஊடாக சிறப்பு திரையிடல்களை படக்குழு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் யாழ் பண்பாட்டு மலர்ச்சி கூடத்தில் கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு திரையிடல் மிகவும் அர்த்தமுள்ள ஒரு தருணமாக அமைந்தது.
சிறப்பு விருந்தினர்களுடன் கலந்துரையாடல்...
நாடக பேராசிரியர் கலாநிதி க.சிதம்பரநாதன் மற்றும் அவர் பாரியார் பத்மினி ஆகியோரும், பண்பாட்டு மலர்ச்சி கூட சொந்தங்கள் அனைவரும் கலந்துகொண்ட இந்த சிறப்பு திரையிடலில் படத்தை பார்த்த அனைவரும் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். திரையிடலுக்கு பின்னர் நாடகம் மற்றும் சினிமாத்துறை சார்ந்த கலைஞர்கள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்தும், 'அந்தோனி' திரைப்படம் இலங்கை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்தும் ஆழமான கலந்துரையாடல் நடைபெற்றது.
சினிமாவின் எதிர்காலம் பேசப்பட்டது...
இனிவரும் காலங்களில் இலங்கை தமிழ் சினிமாத்துறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான செயற்பாடுகளை இவ்வாறான சிறப்பு திரையிடல்கள் ஊடாக நடத்த முடியும் என்ற நம்பிக்கை குழுவினரிடம் தெளிவாக வெளிப்பட்டது. இது வெறும் திரையிடல் மட்டுமல்ல — இலங்கை தமிழ் கலைஞர்களை ஒன்றிணைக்கும் ஒரு இயக்கமாக 'அந்தோனி' மாறியுள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
'அந்தோனி' படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் வாழ்த்துக்கள்! இந்தப் படம் இலங்கை தமிழ் சினிமாவின் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் ஒரு படைப்பாக திகழட்டும்!








கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்