இலங்கைத் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக வெளியான ‘அந்தோணி’ (Anthony) திரைப்படம், 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 99வது Academy Awards – International Feature Film பிரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் திரைப்படத்தைத் தேர்வு செய்யும் தேசிய செயல்முறையை நோக்கி தனது அடுத்தகட்ட பயணத்திற்கு தயாராகி வருகிறது.
Osai Films தயாரிப்பில், சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்கியுள்ள ‘அந்தோணி’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட புதிய ‘Road to the Oscars’ அறிவிப்பு, இலங்கைத் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
இலங்கையின் Oscar தேர்வு செயல்முறை தற்போது நடைபெறுகிறது
2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 99வது Academy Awards-க்கான International Feature Film பிரிவில் இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படத்தைத் தேர்வு செய்யும் பணிகளை National Film Corporation of Sri Lanka ஆரம்பித்துள்ளது.
தகுதியான இலங்கைத் திரைப்படங்களுக்கான விண்ணப்பங்கள் 2026 ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 21 வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அனைத்து தகுதியான படங்களையும் பரிசீலித்த பின்னர், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே திரைப்படத்தை National Oscars Selection Committee of Sri Lanka தேர்வு செய்து செப்டம்பர் 28 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.
எனவே, தற்போதைய நிலையில் ‘அந்தோணி’ இலங்கையின் அதிகாரப்பூர்வ Oscar submission ஆக இன்னும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அந்த தேசிய தேர்வு செயல்முறையை நோக்கி தனது Oscar பயணத்தை முன்னெடுக்க தயாராகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணக் கடற்கரையிலிருந்து சர்வதேச அரங்குவரை
யாழ்ப்பாணத்தின் கடலோர வாழ்வியலை பின்னணியாகக் கொண்ட ‘அந்தோணி’, ஒரு மீனவரின் குடும்பம், காதல், பொறுப்புகள் மற்றும் கடலுடன் பிணைந்த வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது.
கயல் வின்சென்ட், டி.ஜே. பானு, சுதர்சன் ரவீந்திரன், சௌமி, நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ரிஷி செல்வம் ஒளிப்பதிவையும், சுரேஷ் ஏ. பிரசாத் படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர்.
சர்வதேச பயணத்தை ஏற்கனவே தொடங்கிய ‘அந்தோணி’
முன்னதாக பல சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரங்களைப் பெற்றுள்ள ‘அந்தோணி’, வெளிநாட்டு பார்வையாளர்களை சென்றடையும் முயற்சியாக வேறு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் French subtitles உடன் திரையிடப்பட்டதுடன், அங்கு தொடர்ச்சியான திரையிடல்களையும் சந்தித்துள்ளது.
இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள “Road to the Oscars – 2027” பயணம், ‘அந்தோணி’ திரைப்படத்தின் சர்வதேச நகர்வில் அடுத்த முக்கியமான கட்டமாக அமைந்துள்ளது.
இலங்கைத் தமிழ் சினிமாவுக்கு முக்கியமான தருணம்
இலங்கையின் 2027 Oscar entry-ஐ தேர்வு செய்யும் தேசிய செயல்முறையில் பல தகுதியான திரைப்படங்கள் பங்கேற்கவுள்ள நிலையில், ஒரு இலங்கைத் தமிழ் திரைப்படமான ‘அந்தோணி’யும் அந்தப் பயணத்தை நோக்கி நகர்வது இலங்கைத் தமிழ் திரைப்படத் துறைக்கு கவனிக்கத்தக்க முன்னேற்றமாகும்.
‘அந்தோணி’ திரைப்படத்தின் 2027 Academy Awards நோக்கிய இந்த புதிய பயணம் சிறப்பாக அமைய, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா – ஜெனோசன் ராஜேஸ்வர், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!


கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்