இலங்கைத் திரைப்படத் துறையின் முக்கிய திரைப்பட நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் WESL Popular Awards Film Festival 2025–2026, கொழும்பு One Galle Face Mall வளாகத்தில் அமைந்துள்ள PVR Cinemas (Luxe)திரையரங்கில் அண்மையில் நடைபெற்றது.
சிங்களம் மற்றும் தமிழ் திரைப்படங்களை ஒரே மேடையில் கௌரவிக்கும் இந்தத் திரைப்பட விழாவில், ஈழத்துத் தமிழ் திரைப்படமான 'அந்தோனி' (Anthony) திரையிடப்பட்டதுடன், திரைப்படத்தின் படக்குழுவினரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
விருது விழாவில் 'அந்தோனி'
திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்வில், பல திரைப்படங்களுடன் இணைந்து 'அந்தோனி'திரைப்படமும் கவனத்தை ஈர்த்தது.
திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் நிகழ்வில் கலந்துகொண்டதுடன், திரைப்படத்தின் பயணத்தை நினைவுகூரும் வகையிலான கௌரவ நிகழ்வும் நடைபெற்றது. திரைப்படத் துறையைச் சேர்ந்த பலரும், அழைப்பாளர்களும், ஊடகப் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
PVR Cinemas-இல் சிறப்புத் திரையிடல்
நிகழ்வைத் தொடர்ந்து, PVR Cinemas (Luxe) திரையரங்கில் 'அந்தோனி' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது.
கொழும்பில் திரைப்படத்தை இதுவரை பார்வையிடாத பல திரைப்படக் கலைஞர்கள், ஊடகப் பிரமுகர்கள், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் திரையிடலில் கலந்துகொண்டு, படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு அங்கீகாரம்
சர்வதேச தரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திரைப்பட விழாவில், இலங்கைத் தமிழ் திரைப்படமான 'அந்தோனி'இடம்பெற்றிருப்பது, இலங்கைத் தமிழ் சுயாதீனத் திரைப்படங்களின் வளர்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.
உள்ளூர் திரைப்படங்களை பரந்த பார்வையாளர் வட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளுக்கு இதுபோன்ற திரைப்பட விழாக்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.
திரைப்படத்தின் அடுத்தடுத்த பயணத்திற்காக Thirai Murasu தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.



















கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்