THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

திரையரங்க வெற்றிக்குப் பின் OTT-யில் பிரம்மாண்ட தடம்! — Amazon Prime Video-வில் இப்போது காணலாம் `அந்தோனி`!

31 Jul, 2026

திரையரங்குகளில் வெளியாகி உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற 'அந்தோனி' திரைப்படம், தற்போது முன்னணி OTT தளமான Amazon Prime Video-வில் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படத் தொடங்கியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் ஆன்மாவை தொடும் இசையில் உருவான இந்தப் படம் இப்போது உங்கள் இல்லத் திரைகளில் காண்பதற்கு தயாராக உள்ளது.


விருது வெற்றி முதல் OTT வரை...

சமீபத்தில் கொழும்பு PVR Cinemas (Luxe)-இல் நடைபெற்ற WESL Popular Awards Film Festival 2025-2026-இல் 'அந்தோனி' பல பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டு சான்றிதழ்களைப் பெற்று சாதனை படைத்திருந்தது. திரையரங்குகளில் பார்வையாளர்களை உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த இந்தப் படம் தற்போது OTT உலகிலும் தடம் பதித்துள்ளது.


📍 குறிப்பு: தற்போது Amazon Prime Video தளத்தில் இந்தியா பயனர்களுக்கு இந்தப் படம் பிரத்யேகமாக கிடைக்கப்பெறுகிறது.


படைப்பில் பங்களித்தவர்கள்...

இசை — இசைஞானி இளையராஜா, தயாரிப்பு — ஓசை பிலிம்ஸ் (கலாவளரி சக. இரமணதாஸ் & சுகந்தினி), எழுத்து & இயக்கம் — சுகிர்தன் கிறிஸ்துராஜா & ஜெனோசன் ராஜேஸ்வர், முதன்மை நடிகர்கள் — கயல் வின்சென்ட், டி.ஜே. பானு, சுதர்ஷன் ரவீந்திரன், நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்டோர்.


யாழ்ப்பாணக் கடலோர மக்களின் வாழ்வியலையும் காதலையும் குடும்பப் பிணைப்பையும் சர்வதேசத் தரத்தில் காட்டியுள்ள 'அந்தோனி' திரைப்படத்தை Amazon Prime Video தளத்தில் கண்டு ஆதரவளிக்குமாறு படக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இலங்கைத் தமிழ் சினிமாவை உலக அரங்கில் உயர்த்திய இயக்குநர்கள் சுகிர்தன், ஜெனோசன், தயாரிப்பாளர்கள் மற்றும் 'அந்தோனி' படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


WATSCH NOW : https://www.primevideo.com/detail/0IIHOI50KDJ2WG8CBGOUFDLVIY?ref_=share_ios_movie

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்