THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

மர்மமும் திகிலும் நிறைந்த அறை! — கணேஷன் மயூரென் இயக்கிய குறும்படத்தின் டீஸர் வெளியானது!

12 Aug, 2026

Mad Magic Digitals தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அறை’ (ARAI — Project #MS10) குறும்படத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் வெளியாகியுள்ளது. கணேஷன் மயூரென் எழுதி இயக்கியுள்ள இந்தக் குறும்படம் Horror Thriller வகையில் உருவாகியுள்ளது என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மர்மத்தை மையப்படுத்திய ‘அறை’…

‘அறை’ என்ற தலைப்பிலேயே கதையின் மர்மத் தன்மையை முன்னிறுத்தியுள்ள படக்குழு, வெளியிட்டுள்ள டீஸர் மூலம் குறும்படத்தின் கதைக்களம் மற்றும் திகில் நிறைந்த சூழலை அறிமுகப்படுத்தியுள்ளது. துரோகம், சட்டவிரோத சூதாட்டம், குற்றச் சம்பவங்கள், நண்பர்களுக்கிடையிலான மோதல்கள் மற்றும் அவற்றின் பின்னணியில் விரியும் மர்மங்கள் என பல்வேறு அம்சங்களை இணைத்து இந்தக் குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


எழுத்து முதல் படத்தொகுப்பு வரை கணேஷன் மயூரென்…

இந்தக் குறும்படத்தை கணேஷன் மயூரென் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தொகுப்பையும் அவரே மேற்கொண்டுள்ளார். குறும்படத்திற்கு நிருக்ஷன் (VM Records) இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை நதாஷா ஸ்டீபன் மேற்கொண்டுள்ளார். ஆடை வடிவமைப்புப் பணிகளை சசிகுமார் மற்றும் தனு ஆகாஷ் கவனித்துள்ளனர். வெளிச்சமைப்பில் தனு மற்றும் ஜனனி இணைந்துள்ளனர்.


அக்டோபர் 15 வெளியாகிறது ‘அறை’…

டீஸருடன் குறும்படத்தின் வெளியீட்டு திகதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ‘அறை’ குறும்படம் அக்டோபர் 15 அன்று வெளியாகவுள்ளது. Horror Thriller கதைக்களத்தில் புதிய குறும்பட முயற்சியை முன்னெடுத்துள்ள கணேஷன் மயூரென் மற்றும் Mad Magic Digitals குழுவினருக்கு Thirai Murasu குழுவின் வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்