THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

தமிழ் நடிகை விதுர்ஷா வைஷாலியின் முதல் சிங்கள திரைப்படம் — Ayeth Api விரைவில் வருகிறது!

15 Jun, 2026

இலங்கை திரையுலகில் ஒரு புதிய சேர்க்கையாக, Golden Frames Lanka Films தயாரிப்பில், இயக்குநர் நாலக விதானகேயின் இயக்கத்தில் உருவாகியுள்ள "Ayeth Api" (Shadows of the Horizon) சிங்கள திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.


தமிழ் நடிகையின் சிங்கள திரைப்பட அறிமுகம்...

இந்தத் திரைப்படத்தில் தமிழ் நடிகை விதுர்ஷா வைஷாலி முதன்முறையாக சிங்கள திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. சிங்கள திரையுலகிலும் தன் திறனை வெளிப்படுத்த தயாராகியுள்ளார். இரு மொழி ரசிகர்களின் மத்தியிலும் விதுர்ஷாவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பலாம்.


நடிகர்கள்...

இந்தத் திரைப்படத்தில் அமில கருணாநாயகே, சேனாலி ஃபொன்சேகா, டீனா ஷேனல், டேவ் சுரேந்திரா, விதுர்ஷா வைஷாலி மற்றும் ரித்துகி ரிஹான்சா ஆகியோர் முதன்மையான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படைப்பில் பங்களித்தவர்கள்...

தயாரிப்பு — J. கமினி ஜயவர்தன, இயக்கம் — நாலக விதானகே, திரைக்கதை — கரீந்திர எதிரிசிங்கே, ஒளிப்பதிவு — ஜனித் சேனாநாயகே, படத்தொகுப்பு — திவங்க அமரசிரி, கலை இயக்கம் — சுபுன் திலங்க, பின்னணி இசை — எனீஷா துல்ஷானி, மேக்கப் — அனுர சந்த ஜயசூரிய, உதவி இயக்குநர் — தரிந்து லக்மின பண்டார, தயாரிப்பு மேலாளர் — கபில ருக்மன் தென்னகூன், உடை வடிவமைப்பு — யசோதன அபயவர்தன, ட்ரோன் இயக்குநர் — சஹன் திலகரத்ன.


இந்தத் திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! "Ayeth Api" விரைவில் வெளியாகி இரு மொழி ரசிகர்களையும் கவரட்டும்!





கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்