ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பாவில் (Europe) மிக பிரம்மாண்டமாக நடைபெற்று கலைப்பிரியர்களின் அமோக ஆதரவைப் பெற்றுவரும் 'Beat Your Heart' கலைத் திருவிழா, முதன்முறையாக இலங்கையில் நடைபெறவுள்ளது!
SOE வழங்கும் இந்த பிரம்மாண்ட நடனப் போட்டியும் கலை நிகழ்ச்சியும் வரும் ஆகஸ்ட் 1, 2026 சனிக்கிழமையன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கத்தில் (Thanthai Chelva Auditorium) வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
பாட்டு, நடனம், இசை என எல்லையற்ற படைப்பாற்றலையும் கலை ஆர்வத்தையும் கொண்டாடும் இந்த விழா, வெறும் நடனப் போட்டியாக மட்டுமன்றி, சர்வதேச மற்றும் உள்ளூர் கலைஞர்கள் ஒன்றிணையும் பிரம்மாண்ட மேடையாகவும் அமையவுள்ளது.
சர்வதேச நடுவர்கள் & சிறப்பு விருந்தினர்கள்...
இப்போட்டியின் இறுதிச் சுற்றின் (Grand Finale) நடுவர்களாக சர்வதேசத் புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்:
மணி சந்திரா (Mani Chandra) - இந்தியா
தேவினா கணேசன் (Devina Ganeshan) - இலங்கை
எம்.எஸ். நிமல் (M.S. Nemal) - மலேசியா
ஒவோன் ஏ. டாரிங்டன் (Yvonne A. Torrington) - சுவிட்சர்லாந்து
முன்னணித் தொகுப்பாளர்கள் & கலை நிகழ்ச்சிகள்...
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் இந்தியாவின் முன்னணித் தொகுப்பாளர் ஆர்.ஜே. விஜய் (RJ Vijay - Main Host) முதன்மைத் தொகுப்பாளராக வருகை தருகிறார். அவருடன் இணைத் தொகுப்பாளராகவும், தனது இனிமையான குரலால் பாடல்களை வழங்கி ரசிகர்களை மகிழ்விக்கவும் துபாயிலிருந்து ஐஸ்வர்யா யோகராஜ் (Aishwarya Yogarajah - Host & Singer) பங்கேற்கிறார்.
நிகழ்ச்சி விவரங்கள்:
நாள்: ஆகஸ்ட் 01, 2026 (சனிக்கிழமை)
இடம்: தந்தை செல்வா அரங்கம் (Thanthai Chelva Auditorium), யாழ்ப்பாணம்
நேரம்: மாலை 3:00 மணி முதல் (Doors Open at 3:00 PM)
போட்டிகள்: பரதம் ஃயூஷன் (Bharatham Fusion) & நடன யுத்தம் (Dance Battle / Dance Contest)
டிக்கெட் முன்பதிவு & விவரங்களுக்கு: 074 065 1915 / 076 395 2675
ஐரோப்பாவைக் கலக்கிய இந்த பிரம்மாண்டக் கலைத் திருவிழா முதன்முறையாக யாழ் மண்ணில் அடி எடுத்து வைப்பது ஈழத்து கலைப்பிரியர்களுக்குக் கிடைத்த ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்