இலங்கைச் தமிழ் இசைத்துறையில் காதல், புகைப்படக் கலை மற்றும் மெல்லிசையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள "CLICK OF LOVE" அதிகாரப்பூர்வ இசை வீடியோ தற்போது Yuktha Production யூடியூப் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Yuktha Production நிறுவனத்தின் தயாரிப்பில், வி.எஸ். சிந்து (Vs.Sinthu) அவர்களின் இயக்கத்தில் இப்பாடல் மிகவும் அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் படமாக்கப்பட்டுள்ளது.
புகைப்படக் கலையும் காதல் உணர்வுகளும்...
புகைப்படக் கலைஞன் ஒருவனின் கேமரா லென்ஸுக்குள் தற்செயலாகச் சிக்கி, பின் மனதிற்குள் மலரும் அழகான காதல் உணர்வுகளை இப்பாடல் காட்சிப்படுத்துகிறது. "நீ வந்த நேரம் நின்று போனதே... என் இதயம் உன்னில் தொலைந்ததே..." எனத் தொடங்கும் வரிகள் காதலின் மென்மையான உணர்வுகளைப் பார்வையாளர்களின் மனதிற்குள் மிக இயல்பாகக் கடத்துகின்றன.
நட்சத்திரங்கள் & தொழில்நுட்பக் கூட்டணி...
இப்பாடலில் எஸ்.கே. கிஷோ (Sk_Kisho) மற்றும் ஜாரா (Zara) ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் தோன்றி தங்களின் அழகான நடிப்பாலும் நடனத்தாலும் காட்சியமைப்புகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.
கார்த்தி தர்மேஷ் (Karthi Tharmesh) அவர்களின் இசையமைப்பில், கார்த்தி தர்மேஷ் மற்றும் ஆண்டனி கஜெந்தினி (Antony Kajenthini) இணைந்து பாடலைப் பாடியுள்ளனர். எஸ்.கே. கிஷோ இப்பாடலின் வரிகளை எழுதி, படத்தொகுப்புப் பொறுப்புகளையும் மேற்கொண்டுள்ளார். ராஜ் மூவிஸ் (Raj Movies) அவர்களின் அழகிய ஒளிப்பதிவும், வி.ஜே. சுஜே (VJ Suje) அவர்களின் துடிப்பான நடன அமைப்பும் (Choreography), சசிகரன் யோ (Sasikaran Yo) அவர்களின் VFX & DI பணிகளும் பாடலின் தரத்தைச் சிறப்பாக உயர்த்தியுள்ளன.
சுயாதீனத் தமிழ் இசைத்துறையில் ஒரு அழகான காதல் அனுபவத்தைத் தந்துள்ள "CLICK OF LOVE" இசை வீடியோவை உருவாக்கிய இயக்குநர் வி.எஸ். சிந்து, Yuktha Production மற்றும் குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்