THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

`Dark Spell` ஜூலை 11 அன்று திரையரங்கில்! — Dematagoda Regal Cinema-வில் இரு சிறப்புக் காட்சிகள்!

07 Jul, 2026

ரசிகர்களே, காலண்டரில் ஜூலை 11 என்ற தேதியை குறித்துக் கொள்ளுங்கள்! இயக்குநர் J. Brinthanath இயக்கத்தில் உருவாகியுள்ள 'Dark Spell' திரைப்படம் Dematagoda Regal Cinema திரையரங்கில் மாலை 5.30 மணி மற்றும் இரவு 7.30 மணி என இரு சிறப்புக் காட்சிகளாக ரசிகர்களை சந்திக்கவுள்ளது.


வித்தியாசமான அனுபவம் உங்களை காத்திருக்கிறது...

வித்தியாசமான கதைக்களம் மற்றும் தொழில்நுட்பத் தரத்துடன் உருவாகியுள்ள 'Dark Spell', திரையரங்கில் ஒரு தனிவிதமான அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கையுடன் தெரிவிக்கிறது. ரசிகர்கள் மத்தியில் இந்தத் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


படைப்பில் பங்களித்தவர்கள்...

இசை — Anushan, கலை இயக்கம் — V.S. Sinthu, படத்தொகுப்பு — Niven, ஒளிப்பதிவு — Suvikaran, ஒப்பனை — Derien.

திரையிடல் விவரங்கள் — ஜூலை 11, Dematagoda Regal Cinema, மாலை 5.30 மணி & இரவு 7.30 மணி.


'Dark Spell' படக்குழுவினர் அனைவருக்கும் ThiraiMurasu குழுவின் வாழ்த்துக்கள்!







கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்