THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

சோஷியல் மீடியா காதலும் பன்மொழி இசையும்! — `என்று பார்ப்பாயோ...` மியூசிக் வீடியோ வெளியானது!

08 Aug, 2026
இலங்கைத் தமிழ் இசைத் துறையில் புதிய பரிமாணத்தை கொண்டு வரும் வகையில் NIROSHAN SRIKANTHA தயாரிப்பில் BGM (Beyond Grooves & Melodies) நிறுவனத்தின் உருவாக்கத்தில் உருவான 'என்று பார்ப்பாயோ...' அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ YouTube தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. BGM நிரோஷனின் கதை மற்றும் இயக்கத்தில் உருவான இந்தப் பாடல் இன்றைய சின்னச் சின்ன சோஷியல் மீடியா காரணங்களால் காதலர்களுக்குள் ஏற்படும் ஊடலும் கோபமும், இறுதியில் உண்மையான அன்பின் முன்னால் கரைந்து மீண்டும் அவர்கள் ஒன்றிணைவதே 'என்று பார்ப்பாயோ...' பாடலின் உண்மையான கதைக்களமாகும்!

3 மொழிகளின் சங்கமம்...
தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளின் வரிகள் ஒன்றிணைந்த பன்மொழிப் பாடலாக இந்தப் பாடல் உருவாகியுள்ளது. இசையை வின்சன் சிவா அமைத்துள்ளார். தமிழில் மதுவி, சிங்களத்தில் இமானுவேலி மற்றும் ஆங்கிலத்தில் லெதே ஆகியோர் பாடியுள்ளனர். வரிகளை எஸ். முகமது, திலின யேபா மற்றும் லெதே ஆகியோர் எழுதியுள்ளனர். ஒலிக்கலவையை சி. சுதர்ஷன் மற்றும் Re-Mixing-ஐ ஆதித் வருண் கவனித்துள்ளனர்.

திரையில் BGM நிரோஷன் & KIRU கூட்டணி...
இந்தப் பாடலில் BGM நிரோஷன் மற்றும் KIRU இணைந்து முன்னணித் தோற்றத்தில் நடித்துள்ளனர். வினித்தன், சுகன்யா, நிவின், ரெபேக்கா மற்றும் லக்கு SKL ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை தருண் பாஸ்கர் மேற்கொண்டுள்ளதுடன் படத்தொகுப்பு மற்றும் வண்ணக் கலவையை நிவின் கவனித்துள்ளார். ஒப்பனை — ஸ்ரீவித்தியா, வடிவமைப்பு — ராஜீவன்.

இன்றைய தலைமுறை விரும்பும் வகையில் காதல் உணர்வுகளையும் பன்மொழி வரிகளையும் நேர்த்தியாக வழங்கியுள்ள இயக்குநர் BGM நிரோஷன், KIRU மற்றும் 'என்று பார்ப்பாயோ...' குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்