THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

`துடிப்பான ராப் இசையில் அசத்தும் எரிக் பெர்னாண்டோ!` — `Silra` அதிகாரப்பூர்வ இசை வீடியோ வெளியாகியுள்ளது!

22 Jul, 2026

இலங்கைச் சுயாதீனத் தமிழ் இசைத்துறையில் தனது புதுமையான பாணி, துடிப்பான வரிகள் மற்றும் காட்சியமைப்புகளால் இளைஞர்களைக் கவர்ந்து வரும் எரிக் பெர்னாண்டோ (Eric Fernando) அவர்களின் வரிகள், இசை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள "Silra" அதிகாரப்பூர்வ இசை வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


சுயாதீனக் கலைஞனின் தனித்துவக் குரல்...

Ratsch Productions (Pvt) Ltd இன் ஆடியோ விநியோகத்தில் (Audio Distribution) வெளியாகியுள்ள இப்பாடல், ஒரு சுயாதீனக் கலைஞனின் சுதந்திரமான சிந்தனைகள், திரையுலகில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போலியான மனிதர்களைக் கடந்து தனது சொந்த வழியில் பயணிப்பதன் அவசியத்தைப் பேசுகிறது. "சில்ரையெல்லாம் போங்கடி... தம்பி ஒரு நிலை தெரிக்கப் போகுது..." எனத் தொடங்கும் வரிகளுடன் கூடிய துடிப்பான தாளமும் இளைஞர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.


தொழில்நுட்பக் கூட்டணி...

இப்பாடலின் இசை, புரோகிராமிங் மற்றும் வரிகளை எரிக் பெர்னாண்டோ அமைத்துள்ள நிலையில், Sinx FX அவர்களின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் வண்ணக் கலவை (DOP, Edit, Color Grade) காட்சிகள் மிகத் தரமாக உருவாக உதவி புரிந்துள்ளன. பாடலின் ஆடை பங்காளியாக (Clothing Partner) Grab.lk இணைந்துள்ளதுடன், கிளிநொச்சி KVM Creations Studio மற்றும் SJK ஆகியோருக்கு படக்குழுவினர் சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.


சுயாதீனத் தமிழ் இசைத்துறையில் தனது தனித்துவமான முத்திரையைப் பதித்து வரும் "Silra" இசை வீடியோவை உருவாக்கிய எரிக் பெர்னாண்டோ மற்றும் குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்