THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

`மிரட்டலான த்ரில்லர் அனுபவம்!` — லீமுரளி இயக்கத்தில் உருவாகும் `GREY` திரைப்படத்தின் முதல் புரோமோ வீடியோ வெளியானது!

15 Apr, 2026

சர்வதேசத் தரத்திலான காட்சியமைப்புகளாலும், விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர் கதைக்களத்தினாலும் சினிமா ஆர்வலர்களின் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள 'GREY - The Shades of Humans' திரைப்படத்தின் முதல் அதிகாரப்பூர்வ புரோமோ வீடியோ (Promo 01) தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.


மர்மமும் விறுவிறுப்பும் நிறைந்த காட்சியமைப்பு...

Azonway Pictures தயாரிப்பில், இயக்குநர் லீமுரளி (Lee Murali) அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் புரோமோ காட்சிகளில், கொலைக் களம், காவல் துறை விசாரணை, துப்பாக்கிச் சண்டைகள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் எனப் படம் நெடுகிலும் பரவிக் கிடக்கும் மர்மங்களை மிகவும் விறுவிறுப்பாகக் காண்பித்துள்ளனர். வீடியோவின் இறுதியில் ஒலிக்கும் "மீட் பண்ணலாமா?" என்ற ஒற்றை வசனம் பார்வையாளர்களின் நெஞ்சில் சஸ்பென்ஸை விதைக்கிறது.


பிரமாண்ட நட்சத்திரக் கூட்டணியும் தொழில்நுட்ப பலமும்...

இத்திரைப்படத்தில் ஷெல்வின் தாஸ் (Shelvin Das) முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அல்விஷ் கிளிண்டன் (Alwish Klinton) மற்றும் இலங்கையின் முன்னணி நடிகையான உடாரி வர்ணகுலசூரியா (Udari Warnakulasooriya) ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதிர் ராஜசேகரனின் (Kathir Rajasekaram) அசத்தலான ஒளிப்பதிவு மற்றும் கூர்மையான படத்தொகுப்பு, ஹிப் ஹாப் சங்கீயின் (Hip Hop Sangee) விறுவிறுப்பான பின்னணி இசை ஆகியவை புரோமோ வீடியோவிற்குப் பெரும் காட்சி மற்றும் ஒலி பலத்தைச் சேர்த்துள்ளன.


திரைத்துறையில் சர்வதேசத் தரத்தில் களமிறங்கியுள்ள 'GREY' திரைப்படத்தின் இயக்குநர் லீமுரளி மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவிற்கும் ThiraiMurasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்