Eastern Fox மற்றும் Screen Entertainment கூட்டணியில் Rojus De Zilva தயாரிப்பில் உருவாகியுள்ள 'இரு முகம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு இப்போது மேலும் அதிகரித்துள்ளது.
இயக்குநர் கே. கிஷாந்தின் பன்முகத் திறன்...
'இரு முகம்' திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ள கே. கிஷாந்த், இயக்கத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு மற்றும் DI உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகளையும் தானே கவனித்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒரே நபர் இத்தனை பொறுப்புகளை ஏற்று படைப்பை உருவாக்கியிருப்பது அவரது அர்ப்பணிப்பிற்கு சாட்சியாக நிற்கிறது.
நட்சத்திர அணி...
இந்தத் திரைப்படத்தில் மு. பிரதீப்ஜான், தானுஷ்கா ரமேஷ், மு. முரளிதரன், தேவா அலோசியஸ், துஷிமயுரன், வி. சாரவணன், உருதிரா யுவன், கிங்ஸ்லி GR, கே. சுகுமார், எம். திலோசன், சாது கிருஷ், சண்முகநாதன் ரகுதாஸ், கே. முரளிதரன், மைக்கேல் பிரேஜீன், ஆர். திரேசா ஜூலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முழு குழு விவரங்கள்...
இணை இயக்கம் — எம். பிரதீப்ஜான், துஷிமயுரன், எம். ஜாதிஜான், ஆர். மோகன்சாஜேவன், பாடகர்கள் — விதியான் இந்துருஜித், உதயன், பிரேமினி, தவக்குமார் சஹாரிஹா, பாடல் வரிகள் — பி. அபிலாஷன், கலை — சுஜீந்திரன். ஏ, ஒளியமைப்பு — என். நிருஷாந்த், டப்பிங் — கே. பிரசானியா, கே. கிஷாந்த், Stills — துஷி (Venil Studio), இசை Arrangement, Mixing & Mastering — AJ சங்கர்ஜன், திரை Co-Production — Screen Entertainment.
'இரு முகம்' படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஆகஸ்ட் மாதம் திரையரங்கில் வெற்றிகரமாக வரட்டும்!






கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்