K. Kishanth கதை, திரைக்கதை, வசனம், இசை மற்றும் இயக்கத்தில் உருவாகும் ‘இருமுகம் (Irumugam)’ திரைப்படத்தின் இந்த முதல் பாடலுக்கு P. Abilashan வரிகளை எழுதியுள்ளார்.
காதல் உணர்வுகளைப் பேசும் ‘கை வீசும் காகிதங்கள்’
“இளவேனில் காலத்தில் எதிர்பாரா நேரத்தில்
கைவீசும் காகிதங்கள் கதைகள் பேசாதோ…”
எனத் தொடங்கும் பாடல் வரிகள், எதிர்பாராத சந்திப்புகளையும் காதல் உணர்வுகளையும் கவித்துவமாக வெளிப்படுத்துகின்றன.
பாடலுக்கு Vithiyan Indurujith, Uthayan Premini மற்றும் Thavakumar Sahaariha குரல் வழங்கியுள்ளனர். K. Kishanth இசையமைத்துள்ள நிலையில், A.J. Shangarjan கூடுதல் இசைக்கோர்ப்பு, Mixing மற்றும் Mastering பணிகளை மேற்கொண்டுள்ளார்.
‘இருமுகம்’ திரைப்படப் பயணம்
Eastern Fox மற்றும் Screen Entertainment இணைவில் உருவாகி வரும் இப்படத்தில் Prathijan, Thanushga Ramesh, Muralitharan உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் ஒளிப்பதிவு மற்றும் ஒளி அமைப்பை Narendran Nirushanth மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பையும் K. Kishanth கவனித்துள்ளார்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட இசை வெளியீட்டு விழா மட்டக்களப்பில் நடைபெற்றதைத் தொடர்ந்து, தற்போது முதல் பாடலின் Lyrical Video வெளியாகியிருப்பது ‘இருமுகம்’ திரைப்படத்தின் அடுத்தகட்ட இசைப் பயணமாக அமைந்துள்ளது.
‘இருமுகம்’ திரைப்படத்தின் இசைப் பயணம் சிறப்பாக அமைய, K. Kishanth தலைமையிலான படக்குழுவினர் மற்றும் இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் Thirai Murasu ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்