THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

`என் சினிமா பயணத்தில் முதல்முறையாக இஸ்லாமியக் கதாபாத்திரம்!` — ஒப்பனைப் புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ந்த நடிகர் ஜெறாட் நோயல்!

09 Aug, 2026

இலங்கைத் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான ஜெறாட் நோயல், தனது திரைப் பயணத்தில் முதல்முறையாக ஒரு பிரம்மாண்டமான முழுநீளத் திரைப்படத்தில் இஸ்லாமியக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதாக அறிவித்துள்ளார். தனது கதாபாத்திரத்திற்கான பிரத்யேக ஒப்பனைப் புகைப்படங்களை வெளியிட்டு நடிகர் நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளார்.


ஜெறாட் நோயலின் மனமார்ந்த பதிவு...

"எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே... எனது சினிமா பயணத்தில் நான் முதன் முதலாக இஸ்லாமியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் மிகப்பெரிய முழுநீளத் திரைப்படம் 'ராவணமகன்' ஆகும். ஒரு கலைஞனாக எனக்குள் இருக்கும் பாத்திர தேடல்களில் தற்போது எனக்கே ஏற்றது போல் பல கதாபாத்திரங்கள் பொருந்திப் போவதைப் பார்க்கும்போது மனதில் ஏதோ ஒருவகை பேரானந்தம்! என் கலைத்தாயை இருகரம் கூப்பி நன்றி நவில்கின்றேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


பிரம்மாண்ட இருமொழிப் படைப்பு...

தமிழில் 'ராவணமகன்' என்றும் சிங்களத்தில் 'வீரா' என்றும் இரு மொழிகளில் பிரம்மாண்ட செலவில் உருவாகும் இந்தத் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் உள்ளது. வித்தியாசமான கோணங்களில் வெளியாகியுள்ள ஒப்பனைப் புகைப்படங்கள் இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் கணிசமாக அதிகரித்துள்ளன. மிக விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


ஒவ்வொரு படத்திலும் புதிய பரிமாணங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் ஜெறாட் நோயல் மற்றும் 'ராவணமகன்' படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!






கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்