இலங்கையின் கலை மற்றும் கலாசாரத் துறைக்கு அளப்பரிய பங்காற்றிய சிரேஷ்ட கலைஞர்களை கௌரவிக்கும் வகையில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் "41வது கலாபூஷணம் அரச விருது விழா — 2026"-க்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டு வருகின்றன. இலங்கையின் கலைத்துறையை தங்களின் வாழ்நாள் சேவையால் வளப்படுத்திய மூத்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய தேசிய விருதாக இந்த கலாபூஷணம் விருது அமைகிறது.
தகுதிகள் என்ன?...
கலாபூஷணம் அரச விருதுக்கு விண்ணப்பிக்கும் கலைஞர்கள் 2026.06.30 ஆம் திகதியன்று 60 வயதைப் பூர்த்தி செய்தவராக இருத்தல் வேண்டும். கலைத்துறையில் தொடர்ச்சியாக 15 வருடங்களுக்கும் மேலாக சேவை ஆற்றியிருக்க வேண்டும். இதற்கு முன்னர் கலாசார விடயப் பொறுப்பு அலுவலரிடம் கலாபூஷணம் விருதுக்காக விண்ணப்பிக்காத சிரேஷ்ட கலைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிப்பது எப்படி?...
சிரேஷ்ட கலைஞர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நிழற்படப் பிரதிகளை விண்ணப்பத்துடன் இணைத்து 2026 ஆகஸ்ட் 30-ஆம் திகதிக்கு முன்னர் உரிய பிரதேச செயலகத்தின் கலாசாரப் பிரிவில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலதிக தகவல்களுக்கு கலாசார அலுவல்கள் திணைக்களத்தை 0112 882592 / 0112 872031 என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பப் படிவம் மற்றும் சுற்றறிக்கையை culturaldept.gov.lk இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
இலங்கைத் தமிழ் மற்றும் தேசிய கலைத்துறையில் முத்திரை பதித்த நமது மூத்த கலைஞர்கள் இந்த தேசிய விருதைப் பெற்றுக்கொள்ள Thirai Murasu குழுவின் வாழ்த்துகளும் அழைப்பும்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்