THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

“மட்டக்களப்பில் Aliens பரபரப்பு! இருவரை தூக்கிச் சென்ற விண்கலம்” — ‘கயிறு’ படத்தின் வித்தியாசமான Cast Reveal Promo!

15 Sep, 2026

P. Muralitharan கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய திரைப்படமான ‘கயிறு’ (KAYIRU) படத்தின் கதாநாயகன் மற்றும் கதாநாயகியை அறிமுகப்படுத்தும் புதிய Promo இன்று வெளியாகியுள்ளது.

வழக்கமான Poster அல்லது Cast Announcement முறையிலிருந்து மாறுபட்டு, வேற்றுகிரக விண்கலம் மற்றும் Alien-themed கற்பனைக் காட்சிகளை மையமாகக் கொண்ட Promo concept மூலம் படத்தின் பிரதான நடிகர்களை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

RJ Nelu – Ajitha Chandrasekaran அதிகாரப்பூர்வ அறிமுகம்

சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் இருவரை வேற்றுகிரக விண்கலம் அழைத்துச் செல்வது போன்ற கற்பனைக் காட்சிகளுடன் நகரும் Promo-வின் இறுதியில், ‘கயிறு’ திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களுக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இதன்படி,

ஆர்ஜே நெலு — ‘குலோத்துங்கன்’ மற்றும் ‘லெனின்’ கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

அஜிதா சந்திரசேகரன் — படத்தின் பெண் முன்னணி கதாபாத்திரமான ‘அபிராமி’யாக நடிக்கிறார்.


வித்தியாசமான Promo முயற்சி

முன்னதாகவும் தனது திரைப்பட அறிவிப்புகளை வித்தியாசமான முறையில் வெளியிட்டு வந்த ‘கயிறு’ படக்குழு, தற்போது நாயகன்–நாயகி அறிமுகத்தையும் தனித்துவமான Promo concept மூலம் வெளியிட்டுள்ளது.

இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள Sci-Fi / Alien காட்சியமைப்பு Cast Reveal Promo-வுக்கான creative concept என்பதும் குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான Promo வடிவில் தனது பிரதான நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ள ‘கயிறு’ திரைப்படத்தின் அடுத்தகட்ட பயணம் சிறப்பாக அமைய, P. Muralitharan தலைமையிலான படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!



கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்