THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

`கயிற்றின் வலிமை கைகளைப் பிணைப்பதில் அல்ல... இதயங்களை இணைப்பதில் தான்!` — Visual Art Movies-இன் 4-வது படைப்பிற்கு `கயிறு` எனத் தலைப்பு அறிவிப்பு!

09 Aug, 2026

இலங்கைத் தமிழ் சினிமாத் துறையில் எமது மண் சார்ந்த கதைகளையும் மனித உணர்வுகளையும் தத்ரூபமாக காட்சிப்படுத்தி வரும்  தயாரிப்பு நிறுவனமான Visual Art Movies தனது 4-வது முழுநீளத் திரைப்படமான 'Project VAM-4'-க்கு 'கயிறு' (KAYIRU) என ஆழமான தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் சிறப்பு லிரிக்கல் வீடியோ இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.


'மாயைமற' முதல் 'கயிறு' வரை...

முன்னதாக 'மாயைமற', 'தளராதவன்' மற்றும் 'போடியார்' ஆகிய திரைப்படங்களை தயாரித்து ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் பி. முரளிதரனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் இந்தப் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.


லிரிக்கல் வீடியோ உணர்த்தும் கதைக்களம்...

இன்று வெளியான லிரிக்கல் வீடியோ மூலம் கதையின் ஆழமான பின்னணி குறித்த பல சுவாரஸ்யமான சாத்தியக்கூறுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மசூதி, கோவில் கோபுரம் மற்றும் விகாரை ஆகிய மூன்று வழிபாட்டுத் தலங்கள் வரிசையாக காட்சியமைக்கப்பட்டிருப்பது பல்லினச் சமூகங்கள் வாழும் இலங்கை மண்ணில் மத நல்லிணக்கம் மற்றும் மனிதப் பிணைப்பை மையமாகக் கொண்ட கதையாக இது அமையக்கூடும் என உணர்த்துகிறது.


"போர் செய்தேனே தினமும் வென்றேனே... அறியாமல் பிழை செய்தேன் பரிகாரம் தேடியே..." என்ற பாடல் வரிகள், கடந்த காலத்தில் அறியாமல் செய்த தவறுகளுக்காக வருந்தி பரிகாரம் தேடும் ஒரு மனிதனின் போராட்டமாக இக்கதை அமைய வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டுகின்றன. மரத்தின் கிளையில் தொங்கும் தூக்குக்கயிறு, சிறைச்சாலையின் இருட்டு அறை போன்ற காட்சிகள் படத்தின் தலைப்பான 'கயிறு' என்பதன் குறியீட்டு அர்த்தத்தை ஆழமாக வெளிப்படுத்துகின்றன.


படைப்பில் பங்களித்தவர்கள்...

எழுத்து, இயக்கம் & Animation — பி. முரளிதரன், பாடலாசிரியர் — கவியாழர் கே.ஆர். வியன்சீர், இசை & குரல் — அ.ஜெ. சங்கர்ஜன், ஒளிப்பதிவு — ரெஜி செல்வராசா, படத்தொகுப்பு — தினு மகேந்திரன், தயாரிப்பு நிறுவனம் — Visual Art Movies.


'கயிறு' திரைப்படத்திற்கும் படைப்பாளி பி. முரளிதரன், இசையமைப்பாளர் அ.ஜெ. சங்கர்ஜன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்

D
david kanagaretnam

தகவலை சுவாரசியமாக வழங்கியதற்காக மிகவும் நன்றி திரை முரசு

10 Aug, 2026