Kesh Film Factory நிறுவனத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் தயாரிப்பில் உருவான ‘மானிடம்’, ‘அனுகம்பை’, ‘வைத்தியர் பைத்தியர்’ ஆகிய மூன்று குறுந்திரைப்படங்களின் சிறப்புத் திரையிடல் கடந்த அக்டோபர் 04ஆம் தேதி, கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.
Kesh Film Factory-இன் ஸ்தாபக இயக்குநர் திருவாய்மொழி கேசவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சட்டத்துறை, மருத்துவம், வர்த்தகம், கலை மற்றும் ஊடகத் துறைகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
நீதியரசர் பிரபாஹரன் குமாரரட்ணம் பிரதம அதிதியாக பங்கேற்பு
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரபாஹரன் குமாரரட்ணம் கலந்து கொண்டு மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
மாருதி டெக்ஸ்டைல்ஸ் பணிப்பாளர் கந்தையா நடராஜா கௌரவ அதிதியாகவும், வைத்திய கலாநிதி எஸ். ஸ்ரீ பவானந்தராஜா விசேட அதிதியாகவும், சட்ட விவகார ஆலோசகரும் அரசகரும மொழிபெயர்ப்பாளருமான ஆர். பிரணவா சிறப்பு அதிதியாகவும் நிகழ்வில் பங்கேற்றனர்.
ஒரே மேடையில் மூன்று குறுந்திரைப்படங்கள்
Kesh Film Factory தயாரிப்பில் உருவான மூன்று குறுந்திரைப்படங்கள் விழாவில் பார்வையாளர்களுக்காக திரையிடப்பட்டன.
🎥 மானிடம்
🎥 அனுகம்பை
🎥 வைத்தியர் பைத்தியர்
சமூக வாழ்வியல், மனித உறவுகள் மற்றும் உளவியல் சார்ந்த கருப்பொருட்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இக்குறுந்திரைப்படங்கள் குறித்து நிகழ்வில் பங்கேற்றவர்களும் தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
முதலாம் ஆண்டு நிறைவின் முக்கிய தருணம்
ஒரு வருட கால பயணத்தை நிறைவு செய்த Kesh Film Factory சார்பில் யோகினி சங்கரலிங்கம் நன்றியுரை வழங்கினார்.
இயக்குநர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து மேற்கொண்ட பணிகளுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
நிகழ்வை ஷிரோமி தொகுத்து வழங்கினார்.
குறுந்திரைப்படங்களின் ஊடாக தொடர்ந்து புதிய படைப்புகளை உருவாக்கி வரும் Kesh Film Factory, ஸ்தாபக இயக்குநர் திருவாய்மொழி கேசவன், திரையிடப்பட்ட மூன்று படைப்புகளின் கலைஞர்கள் மற்றும் முழுத் தொழில்நுட்பக் குழுவினருக்கும் திரைமுரசு ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!


















கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்