கொழும்பு சைவ மங்கையர் கழகம் (Hindu Women’s Society Ltd.) ஏற்பாடு செய்துள்ள ‘வானவில் 2026 – பக்தி இசை நர்த்தன சங்கமம்’ நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரபல தென்னிந்திய நடிகை குஷ்பூ சுந்தர் (Khushbu Sundar) இலங்கை வருகை தந்துள்ளார்.
பக்தி இசை, நடனம் மற்றும் பாரம்பரியக் கலை நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடைபெறும் இந்த நிதி திரட்டும் கலாசார நிகழ்வில் குஷ்பூ சுந்தர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
Cinnamon Grand Colombo-வில் வரவேற்பு
‘வானவில் 2026’ நிகழ்வின் Official Hospitality Partner ஆக இணைந்துள்ள Cinnamon Grand Colombo விடுதிக்கு வருகை தந்த குஷ்பூ சுந்தருக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
சைவ மங்கையர் கழகத்தின் சமூக மற்றும் கல்விசார் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நிதி திரட்டும் முயற்சியாகவும் இந்த கலாசார நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள குஷ்பூ சுந்தர் அவர்களுக்கும், ‘வானவில் 2026’ நிகழ்வை ஒருங்கிணைத்துள்ள சைவ மங்கையர் கழகத்தினருக்கும் Thirai Murasu ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!







கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்