THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

யுக்தா புரொடக்ஷன்ஸின் `LOOSE LOOSE`— போலி சமூகத்தின் முகத்திரையை கிழிக்கும் புதிய தலைமுறையின் துள்ளல் இசை!

16 Jun, 2026

சமீபகாலமாக Independent தமிழ் இசை உலகில் புதிய அலை எழுந்து வருகிறது. சினிமா பாடல்களுக்கு இணையாக, சில நேரங்களில் அதை விடவும் மேலாக, சுயாதீன கலைஞர்கள் தங்களின் தனித்துவமான படைப்புகள் மூலம் எல்லைகளை தாண்டி முத்திரை பதித்து வருகிறார்கள். அந்த வரிசையில் யுக்தா புரொடக்ஷன்ஸின் "LOOSE LOOSE" — தற்கால சமூகத்தின் இரட்டை வேட முகத்திரையை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டும் ஒரு எனர்ஜிட்டிக் துள்ளல் பாடலாக வெளிவந்துள்ளது.


கதைக்களமும் சமூகச் செய்தியும்

தற்கால சமூகத்தின் இரட்டை வேட முகத்திரையை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டும் வகையில் ஒரு எனர்ஜிட்டிக் துள்ளல் பாடலாக இது செதுக்கப்பட்டுள்ளது. பிறரின் தேவையற்ற விமர்சனங்கள், பிற்போக்குத்தனமான பார்வைகள் ஆகியவற்றைத் தைரியமாகப் புறந்தள்ளி, தனது சொந்த பாதையில் சுதந்திரமாக வாழ நினைக்கும் இன்றைய Gen-Zதலைமுறையினருக்கான பக்கா ‘Rebel’ கொண்டாட்டப் பாடலாக இப் படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


"சுயாதீன இசைத்துறையில் தங்களின் தனித்துவமான அடையாளத்தோடு தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் இந்த இளம் கலைஞர்களின் முயற்சிக்கு Thirai Murasu குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!"


கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்