இலங்கைத் தமிழ் அரசியல் பரப்பில் முன்னணித் தலைவர்களில் ஒருவரான மனோ கணேசன், தனது தயாரிப்பு நிறுவனமான 'ManoVision' மூலம் திரைப்படத் தயாரிப்புத் துறையில் மிகத் தீவிரமாக மீண்டும் களம் இறங்கியுள்ளார். "என் வாழ்க்கை வரலாற்றில் சினிமா என்பது 1st இன்னிங்ஸ், அரசியல் என்பது 2nd இன்னிங்ஸ். நான் 2nd இன்னிங்ஸை முதலில் விளையாடிவிட்டேன். இப்போது எனது 1st இன்னிங்ஸை இரண்டாவதாகத் தொடங்குகிறேன்!" என்று அவர் தெரிவித்துள்ளது திரைத்துறையில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
'ஆதரேன்' மற்றும் 'கிளிநொச்சி' — அடுத்தடுத்த பிரம்மாண்டத் தயாரிப்புகள்...
தற்போது ManoVision நிறுவனம் இரண்டு முக்கியத் திரைப்படப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. முன்னதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் தமிழில் வெளியாகி கவனத்தைப் பெற்ற 'WithLove' திரைப்படம், தற்போது சட்டப்பூர்வமாக சிங்கள மொழியில் 'ஆதரேன்' (Athren) என்ற பெயரில் ManoVision நிறுவனத்தால் ரீமேக் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ManoVision-இன் அடுத்த பிரம்மாண்டத் தயாரிப்பான 'கிளிநொச்சி' திரைப்படத்தின் முன்தயாரிப்புப் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சினிமாவை காதலிக்கும் நண்பர்களுக்கு அழைப்பு...
இலங்கை, இந்தியா அல்லது உலகளாவிய ரீதியில் திரைப்படத் துறையில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட நண்பர்களை தங்களது குழுவில் இணையுமாறு மனோ கணேசன் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கைத் திரைத்துறையில் சர்வதேசத் தரத்தில் புதிய பாய்ச்சலை தொடங்கியுள்ள ManoVision மற்றும் மனோ கணேசன் அவர்களுக்கு ThiraiMurasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!






கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்