THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

விதுரன் இசையில் புதிய துள்ளலிசை — பிரதீப் விஜயமாலா, RUDAN இணையும் ‘மத்தள மேனி’ ஆகஸ்ட் 28 வெளியீடு!

21 Aug, 2026

இலங்கைத் தமிழ் சுயாதீன இசைத்துறையில் புதிய கூட்டணியில் உருவாகியுள்ள ‘மத்தள மேனி’ (Maththala Meni) மியூசிக் வீடியோ வரும் ஆகஸ்ட் 28ஆம் திகதி மாலை 7:00 மணிக்கு வெளியாகவுள்ளது. பாடலின் அதிகாரப்பூர்வ போஸ்டருடன் வெளியீட்டுத் திகதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

One Third Film Operations மற்றும் Straight Outta Jaffna இணைந்து வழங்கும் இப்பாடலுக்கு, ‘Mr. Mirudhangam’ விதுரன் (Vithuran) இசையமைத்து, இசைக்கோர்ப்பு மற்றும் தயாரிப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.

பிரதீப் விஜயமாலா – RUDAN கூட்டணி

இந்தப் பாடலில் RUDAN வரிகளை எழுதி குரல் வழங்கியுள்ள நிலையில், பிரதீப் விஜயமாலா (Pradeep Vijayamala) ராப் வரிகளை எழுதி பாடியுள்ளார்.

விஜய் ஆண்டனி இசையமைப்பில், அருண் பிரபு இயக்கத்தில் உருவான ‘சக்தி திருமகன்’ (Sakthi Thirumagan) திரைப்படத்தில் பின்னணிப் பாடகராகப் பணியாற்றிய பிரதீப் விஜயமாலா, ‘மத்தள மேனி’ மூலம் மீண்டும் இசை ரசிகர்களைச் சந்திக்கிறார்.

மியூசிக் வீடியோவில் விதுரன், RUDAN, பிரதீப் விஜயமாலா ஆகியோருடன் மாடல் ஹரிந்தி வடுகே (Harindi Waduge) முக்கியமாக இடம்பெற்றுள்ளார்.

இசை & காணொளிக் கூட்டணி

‘மத்தள மேனி’ பாடலின் இசையமைப்பு, Arrangement மற்றும் Production பணிகளை விதுரன் மேற்கொண்டுள்ளதுடன், சம்ரிதா மீனாட்சி (Samritha Meenaakshie) Additional Programming பணிகளில் இணைந்துள்ளார். அஸீம் உஸ்மான் (Azim Ousman) Mixing & Mastering பணிகளை மேற்கொண்டுள்ளார்.

காணொளிக்கான ஒளிப்பதிவை விஜயகுமார் ஜதிபன் (Vijayakumar Jathipan) மேற்கொள்ள, தேவினா கணேஷன் (Devina Ganeshan) நடன இயக்கத்தையும், Sinx FX படத்தொகுப்பு மற்றும் வண்ணச் சேர்க்கைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கைத் தமிழ் இசைத்துறையின் பல இளம் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியில் தயாராகியுள்ள ‘மத்தள மேனி’, இசை மற்றும் நடனத்தை மையப்படுத்திய மியூசிக் வீடியோவாக ஆகஸ்ட் 28 அன்று ரசிகர்களைச் சந்திக்கிறது.

‘மத்தள மேனி’ படைப்புக் குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் வாழ்த்துக்கள்.





கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்