THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

“மத்தள மேனி… என்னவளே என் மகராணி!” — விதுரன் இசையில் RUDAN, Pradeep Vijayamala இணைந்த ‘மத்தள மேனி’ Music Video வெளியானது!

29 Aug, 2026

இளம் இசைக் கலைஞர் Vithuran Premakrishna இசையமைத்து தயாரித்துள்ள புதிய சுயாதீனத் தமிழ் பாடலான ‘மத்தள மேனி (Maththala Meni)’ அதிகாரப்பூர்வ Music Video வெளியாகியுள்ளது.

1NE THIRD மற்றும் Straight Outta Jaffna இணைப்பில் உருவாகியுள்ள இப்பாடலில், நவீன இசை, Rap மற்றும் நடனக் காட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

RUDAN × Pradeep Vijayamala

‘மத்தள மேனி’ பாடலின் வரிகளை எழுதி பிரதான குரலை RUDAN வழங்கியுள்ளார்.

அவருடன் Pradeep Vijayamala தனது Rap பகுதிக்கான வரிகளை எழுதி பாடியுள்ளார். பாடலின் இசை அமைப்பு மற்றும் தயாரிப்பை Vithuran Premakrishna மேற்கொண்டுள்ளார்.

“மத்தள மேனி… என்னவளே என் மகராணி…” என்ற hook line-ஐ மையமாகக் கொண்ட பாடல், காதல் உணர்வை துள்ளலான இசை மற்றும் Rap வடிவத்துடன் இணைக்கிறது.

இசையுடன் இணையும் நடனம்

Music Video-வில் Vithuran, RUDAN, Pradeep Vijayamala மற்றும் Harindi Waduge இடம்பெற்றுள்ளனர்.

Devina Ganeshan நடன அமைப்பை மேற்கொண்டுள்ள நிலையில், performance மற்றும் dance sequences பாடலின் visual presentation-இல் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

தொழில்நுட்பக் கூட்டணி

பாடலுக்கான ஒளிப்பதிவை Jathipan Vijayakumar மேற்கொண்டுள்ளார். SINX FX படத்தொகுப்பு மற்றும் Colour Grade பணிகளை கவனித்துள்ளது.

Azim Ousman Mixing & Mastering பணிகளையும், Samritha Meenaakshie Additional Programming பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.


‘மத்தள மேனி’ பாடலின் இசைப் பயணம் சிறப்பாக அமைய, Vithuran, RUDAN, Pradeep Vijayamala மற்றும் படைப்புக் குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!


கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்