THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

கொழும்பில் கோலாகலமாக தொடங்கும் ‘மித்ரா’! — ஆகஸ்ட் 17 அன்று பூஜை விழா!

13 Aug, 2026

Kesh Film Factory தயாரிப்பில் புதிதாக உருவெடுக்கும் ‘மித்ரா’ (MITHRA) திரைப்படத்தின் தொடக்க விழாவான பூஜை வருகிற ஆகஸ்ட் 17, 2026 திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு கொழும்பு 13, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இலங்கைத் தமிழ் திரையுலகில் புதிய முயற்சியாக களம் இறங்கும் இந்தத் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


படைப்பில் பங்களித்தவர்கள்…

கதை, வசனம் & தயாரிப்பு — முகம்மத் ரில்வான், இயக்கம் — பெனடிக் மாக்ரட், திரைக்கதை — மோசஸ் ஹேரிசன், ஒளிப்பதிவு — கேசவன் திருவாய்மொழி, உதவி ஒளிப்பதிவாளர்கள் — மோசஸ் ஹேரிசன், விஜயகுமார் திலுக்ஷன், படத்தொகுப்பு — Kesh Film Factory, ஒப்பனை — ராஜா நிரோஷனி.


நடிகர்கள்…

கேசவன், ஹேரிசன், நிரோஷனி, மிஹிந்தி, திலுக்ஷன், சத்தியவேல், சிவயோகினி, யுவன், கவிஷ்கா, ராஜேஷ், குணசேகரன், ஷைனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கொழும்பில் நடைபெறவுள்ள இந்தத் தொடக்க பூஜையை தொடர்ந்து திரைப்படத்தின் கதாநாயகன், கதாநாயகி மற்றும் மேலதிக விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


‘மித்ரா’ படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!



கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்