இலங்கைத் தமிழ் திரையுலகில் உருவாகி வரும் புதிய திகில் திரைப்பட முயற்சியான 'மித்ரா' பைலட் திரைப்படத்தின் First Look அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இருண்ட காட்சியமைப்பும் அச்சமூட்டும் போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை உடனடியாக ஈர்த்துள்ளன.
படைப்பின் பின்னணி...
Vaiharai Muthtamil Cultural Association தயாரிப்பில், மொஹம்மது ரில்வான் தயாரித்து, பெனடிக்ட் மக்ரெட் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தின் கதையை மொஹம்மது ரில்வான் எழுதியுள்ளார். திரைக்கதையை மோசஸ் ஹரிசன் வடிவமைத்துள்ளார். ஒளிப்பதிவை கேசவன் திருவைமொழி மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பை Kesh Film Factory கவனித்துள்ளது. மேக்கப் கலைஞராக பார்த்திபன் நிரோஷணி பணியாற்றியுள்ளார்.
நடிகர்கள்...
பெனடிக்ட் மக்ரெட், கேசவன் திருவைமொழி, மோசஸ் ஹரிசன், ராஜா நிரோஷணி, மிஹிந்தி யுமான்சா, விஜயகுமார் திலுக்ஷன், மரியசாமி சத்தியவேல், சிவயோகினி, யுவன் சங்கர் ராஜ், சங்கரலிங்கம் சிவயோகினி, காளிதாசன் கவிஷ்கா, ராமையா ராஜேஷ், கோவிந்தசாமி குணசேகரன் மற்றும் ஷைனி செஹன்சா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
விரைவில் வெளியாகவுள்ள 'மித்ரா' திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். 'மித்ரா' படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்