THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

`முத்தம் போடவா` — ஜீவசுதா-வின் புதிய ஆல்பம் பாடல் இப்போது வெளியீடு!

10 Jul, 2026

சுயாதீன தமிழ் இசைத்துறையில் தங்களின் தனித்துவமான படைப்புகள் மூலம் முத்திரை பதித்து வரும் ஜீவசுதா குழுவினரின் புதிய தயாரிப்பான "முத்தம் போடவா" மியூசிக் வீடியோ இப்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட ஜீவானந்தன் ராம் மற்றும் சுதர்ஷன் ஆறுமுகம் கூட்டணியில் உருவாகியுள்ள இப்பாடல், 80-களின் Retro Pop-Disco ஸ்டைலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


ரெட்ரோ வண்ணங்களின் கொண்டாட்டம்...

ஒரு திரைப்படப் படப்பிடிப்புத் தளத்தில் நடப்பது போன்ற சுவாரசியமான பின்னணியுடன் தொடங்கும் இந்தப் பாடல், பார்க்கும் முதல் நொடியிலேயே ஒரு தனி உலகிற்கு அழைத்துச் செல்கிறது. மஞ்சள், நீலம், இளஞ்சிவப்பு என பிரகாசமான வண்ணங்களும் Neon விளக்குகளின் பின்னணியும் பாடலுக்கு பெரும் பலமாக அமைந்துள்ளன. ஜீவானந்தன் ராம் மற்றும் சுதர்ஷன் ஆறுமுகம் அணிந்திருக்கும் Stylish Costumes மற்றும் Cooling Glasses பாடலின் Funky & Cool மனநிலையை கச்சிதமாக பிரதிபலிக்கின்றன.


தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு...

இசையமைப்பாளர் ஜீவானந்தன் ராமின் துள்ளலான Synth-Pop இசை இளைஞர்களை தாளம் போட வைக்கிறது. அருள்செல்வத்தின் குறும்புத்தனமான காதல் வரிகளும், பிரஜீவ் வேர்லின் துல்லியமான Mixing & Mastering-உம் பாடலின் தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்தியுள்ளன. சீதாராமன் சஞ்சீவனின் Anamorphic Wide-Angle ஒளிப்பதிவிலும், ஹசிதா ஜெயசங்கவின் Color Grading-லும் பாடல் ஒரு Classic & Stylish தோற்றம் பெற்றுள்ளது. பிரியா விஜயரத்னா, மாஷி சேனநாயக்க போன்ற இளம் மாடல்களின் Energetic நடனம் பாடலை மேலும் அழகாக்குகிறது.


சுயாதீன இசைக் களத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு ரெட்ரோ காதல் கொண்டாட்டத்தை கொண்டு வந்துள்ள ஜீவசுதா குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்