THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

`இயற்கையின் குரலாக ஒலிக்கும் படைப்பு!` — எரிக் பெர்னாண்டோவின் உருவாக்கத்தில் வெளியான `நா ஒரு மானு` அதிகாரப்பூர்வ இசை வீடியோ!

21 Mar, 2026

இலங்கைச் சுயாதீனத் தமிழ் இசைத்துறையில் சுற்றுச்சூழல் மற்றும் விலங்கினங்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள "நா ஒரு மானு" (#NaaOruMaanu) அதிகாரப்பூர்வ இசை வீடியோ தற்போது யூடியூப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. Ratsch Productions நிறுவனத்தின் தயாரிப்பில், எரிக் பெர்னாண்டோ (Eric Fernando) அவர்களின் முழுமையான உருவாக்கத்தில் வெளியாகி, சமூக விழிப்புணர்வை மிக ஆழமாகப் பேசும் படைப்பாக இது அமைந்துள்ளது.


விலங்கினங்களின் கோபமும் இயற்கையின் எச்சரிக்கையும்...

"நான் ஒரு மானு நட்டுக்காட்டுல எங்க வீடு இருக்குது சார்... நான் ஒரு மீனு எங்க ஏரியா சுத்தி பவள பாரிங்கப்பா..."என விலங்கினங்களின் குரலாகத் தொடங்கும் இப்பாடல், மனிதனின் சுயநலத்தால் அழிந்து வரும் காடுகள், கடல் மாசுபாடு, யானை வேட்டை, காட்டுத்தீ மற்றும் பருவநிலை மாற்றங்கள் குறித்த மிகக் கடுமையான எச்சரிக்கையை முன்வைக்கிறது. "பொறுமைக்கும் அளவு இருக்கு... ஒரு நாள் ஒரு நொடியில் இதுக்கொரு முடிவு இருக்கு!" என்ற வரிகள் இயற்கையை அழிக்கும் மனிதர்களுக்கு விடப்பட்ட ஆழமான எச்சரிக்கையாக ஒலிக்கின்றன.


முழுமையான ஆக்கமும் தொழில்நுட்பக் கூட்டணியும்...

இப்பாடலின் பாடல் வரிகள், இசையமைப்பு, குரல், காட்சி வடிவமைப்பு மற்றும் இயக்கம் என அனைத்து முதன்மை ஆக்கப் பொறுப்புகளையும் எரிக் பெர்னாண்டோ (Eric Fernando) அவர்களே ஏற்றுச் சிறப்பாகச் செதுக்கியுள்ளார். Mister.M Records-இல் திரு. விதுரன் (Mr. Vidhuran) அவர்களின் ஒலிப்பதிவிலும் (Recording Engineer), Tala Labs-இல் தினேஷாந்த் (Dineshanth) அவர்களின் நேர்த்தியான மாஸ்டரிங் (Mastering) தொழில்நுட்பத்திலும் பாடல் மிகத் தரமாக உருவெடுத்துள்ளது.


சுயாதீனத் தமிழ் இசைத்துறையில் இயற்கை மற்றும் விலங்கினங்களின் பாதுகாப்பிற்காக ஒலிக்கும் "நா ஒரு மானு" இசை வீடியோவை உருவாக்கிய எரிக் பெர்னாண்டோ மற்றும் Ratsch Productions குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்