சுயாதீன தமிழ் இசைத்துறையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட படைப்பு இப்போது வெளியானது. Eleven Records தயாரிப்பில் உருவாகியுள்ள பரிதி மாறனின் "நீ வச்ச தீ" அதிகாரப்பூர்வ லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காதல் மற்றும் பிரிவின் ஆழமான வலியை துள்ளலான இசை வடிவில் கடத்தும் இந்தப் பாடல் கேட்பவர்களின் நெஞ்சை பிசைகிறது.
நெஞ்சில் தாளமிடும் வரிகள்...
"நீ வச்ச தீயில நான் பற்றிப் போகிறேன்... என் நினைவுகள் எங்குமே உன் முகமேனடி..." என வரும் வரிகள் காதலின் தீவிரத்தையும் காதலியின் நினைவுகளால் துடிக்கும் ஒரு இளைஞனின் இதயத் துடிப்பையும் அழகாக விவரிக்கின்றன. "என் கரம் இன்னொருவன் சேர்ந்ததடா... நான் இனி உன்னவள் இல்லையடா... என்னை மறந்திடுடா..." என்ற வரிகள் கேட்பவர்களின் நெஞ்சை பிசையும் வண்ணம் மிக ஆழமாக செதுக்கப்பட்டுள்ளன.
பரிதி மாறனின் பன்முகத் திறன்...
இப்பாடலின் வரிகளை எழுதி, இசையமைத்து, இயக்கியதுடன் தனது பன்முகத் திறனை வெளிப்படுத்தியுள்ளார் பரிதி மாறன். வண்ணமயமான Animation மற்றும் Editing வடிவமைப்பும் லிரிக் வீடியோவின் தரத்தை உயர்த்தியுள்ளன. காதலின் ஆழமான Emotions-ஐ துள்ளலான பின்னணித் தாளங்களுடன் கச்சிதமாக கொண்டு சேர்த்துள்ளது.
சுயாதீன தமிழ் இசைத்துறையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு Emotional காதல் அனுபவத்தை தந்துள்ள "நீ வச்ச தீ" குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்