THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

இலங்கை சூழலில் சர்வதேச நகர்ப்புறக் கதை! — திகிலூட்டும் ஹாரர் அனுபவத்தை தரும் ஃபாஹத்தின் `Night Shift` குறும்படம் வெளியானது!

28 Jul, 2026

இலங்கை சுயாதீன கலைஞர்களின் தொடர்ச்சியான புதுமையான முயற்சிகளுக்கு மத்தியில், Explore with Fahad யூடியூப் தளத்தின் மூலம் இயக்குநர் ஃபாஹத் தயாரித்து இயக்கியுள்ள 'Night Shift' ஹாரர் குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தோனேசிய நகர்ப்புறக் கதை புனைவான 'பொச்சொங்' (Pocong) பேய் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை சூழலுக்கு ஏற்ப இந்தக் குறும்படம் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.


கதை என்ன?...

இரவு நேரப் பணியில் ஈடுபடும் நாயகன், அமைதியான தனது அலுவலக சூழலில் சந்திக்கும் எதிர்பாராத திகிலூட்டும் சம்பவங்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஆசைகள் நிறைவேறாமல் இறந்துபோகும் நபர்கள் 40 நாட்களுக்குப் பிறகு 'பொச்சொங்' பேயாக மாறி பழிவாங்குவார்கள் என்ற கதையை கேள்விப்படும் நாயகன், தன் அலுவலகத்திலேயே அந்த திகில் சம்பவத்தை நேரடியாக எதிர்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகிறான்.


படைப்பில் பங்களித்தவர்கள்...

இயக்கம் — ஃபாஹத், ஒளிப்பதிவு — குகன் ரவிச்சந்திரன், பின்னணி இசை — சாம் நேசன், சிறப்பு ஒப்பனை — கலைச்செல்வன் நிதுஷியா.


குகன் ரவிச்சந்திரனின் இரவு நேர கேமரா கோணங்களும், சாம் நேசனின் திகிலூட்டும் பின்னணி இசையும், நிதுஷியாவின் தத்ரூபமான மேக்கப்பும் சேர்ந்து இந்தக் குறும்படத்தை ஒரு சிறந்த ஹாரர் திரில்லராக உருவாக்கியுள்ளன.


சுயாதீன களத்தில் வித்தியாசமான முயற்சியை கையாண்டு நேர்த்தியாக உருவாக்கியுள்ள ஃபாஹத் மற்றும் 'Night Shift' படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்