யாழ்ப்பாணத்துச் சுயாதீனக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில், Jaffna UC மற்றும் UC Entertainment தயாரிப்பில் உருவாகியுள்ள "நோனா" மியூசிக் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வேகமாக வைரலாகி வருகிறது. துள்ளலான லோக்கல் குத்து இசையும் சுவாரசியமான காதல் மோதல் பின்னணியும் கலந்த இந்தப் பாடல், பார்க்கத் தொடங்கிய நொடியிலிருந்தே கைதட்ட வைக்கிறது.
விக்ரமசிங்கிற்கு லாரன்ஸ் சவால்!...
பாடல் தொடங்கும் போதே தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற மாஸ் டயலாக்குடன் களம் இறங்குகிறது. கண்டக்டராக இருக்கும் கதாநாயகன் லாரன்ஸ், தன்னை அரெஸ்ட் செய்த இன்ஸ்பெக்டர் விக்ரமசிங்கை நோக்கி — "நீ என்ன ஜெயிலுக்கு போட்டு கொசுக்கடி வாங்க வச்ச... ஆனா நான் உன்னை போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு அடிக்க மாட்டேன். உன்னோட பொண்ணை காதலிச்சு, உனக்கு மருமகனாகி உங்க போலீஸ் ஜீப்பையே சீதனமா வாங்குவேன்!" என்று சவால் விடும் காட்சி ரசிகர்களை மிரட்டுகிறது. "சத்தியமா சொல்லுறண்டி நீதான் வேணும் பேபி..." எனத் தொடங்கும் பாடல் அங்கிருந்து நிறுத்தமின்றி கலகலப்பாக நகர்கிறது.
வண்ணமயமான யாழ்ப்பாணம்...
இயக்குநர் ஜான்ஸ் ஹென்றியின் நேர்த்தியான இயக்கத்தில் யாழ்ப்பாணத்துச் சந்தை மற்றும் கிராமிய Locations-ல் மிகவும் வண்ணமயமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஆர். எஸ். ரமணியின் ஒளிப்பதிவும், SR. தூசிகரனின் Editing & Color Tone-உம் பாடலை மிகவும் Crisp-ஆக மாற்றியுள்ளன. நாயகன் தீஷன் ஆனந்தின் துடிப்பான நடனமும், நாயகி தாணுவின் குறும்புத்தனமான முகபாவனைகளும் பாடலுக்கு பெரும் பலமாக அமைந்துள்ளன. வி. நிக்ஷன் மற்றும் ஜாய்சியின் குரல்களில் ஒலிக்கும் அசல் மண்ணின் குத்துத் தமிழ், தியேட்டரில் அமர்ந்து பார்ப்பது போன்ற கொண்டாட்ட உணர்வை தருகிறது.
படைப்பில் பங்களித்தவர்கள்...
இயக்கம் — ஜான்ஸ் ஹென்றி, இசை — வி. நிக்ஷன், வரிகள் — ஜெயநாத் மஹி, பாடியவர்கள் — வி. நிக்ஷன் & ஜாய்சி. என், ஒளிப்பதிவு — ஆர். எஸ். ரமணி, நடன இயக்கம் — ஜான்ஸ் ஹென்றி & நிதர்ஷன், நடிப்பு — தீஷன் ஆனந்த், தாணு, எம். வி. கே. குமணா & குழுவினர், படத்தொகுப்பு & DI — SR. தூசிகரன், Mix & Mastering — JDS Studio.
யாழ்ப்பாணத்துச் சுயாதீன இசைத்துறையில் முற்றிலும் புதிய கொண்டாட்டக் குத்துப் பாடலை தந்துள்ள "நோனா" படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்