சமூக வலைத்தளங்களின் போலித்தனத்தை நையாண்டியுடன் சாடும் "OMG (Oh My God)" மியூசிக் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி பெரும் கவனம் பெற்று வருகிறது. சுயாதீன இசைக் கலைஞர் பூவன் மதீசன் வரிகள் எழுதி, இசையமைத்து, பாடி நடித்திருக்கும் இப்பாடலை இயக்குநர் அரவின் ரமணன் மிக நேர்த்தியாக இயக்கியுள்ளார். Crowd-funded கூட்டு முயற்சியில் உருவான இந்தப் படைப்பு, சமூகப் பொறுப்புடன் கூடிய ஒரு முக்கியமான விழிப்புணர்வு குரலாக ஒலிக்கிறது.
டிஜிட்டல் போலித்தனத்திற்கு நேரடிச் சாட்டையடி...
"அன்று கொல்வான் அரசன் நின்று கொல்வான் இறைவன்" என்ற பழமொழியை தற்கால Gen-Z மற்றும் Algorithm உலகிற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்திருப்பதுதான் இந்தப் பாடலின் மையக்கருத்து. Reels மற்றும் Viral Trends-க்கு பின்னால் ஓடும் இன்றைய சமூகத்தில், நிஜமான நீதிக்கான குரல்கள் எப்படி Hashtags-க்குள் புதைந்து போகின்றன என்பதை பாடல் வரிகள் மிக ஆழமாகவும் நையாண்டியுடனும் பேசுகின்றன. இந்த ஒரு கோணமே "OMG"-ஐ மற்ற பாடல்களிலிருந்து தனித்து நிறுத்துகிறது.
சர்வதேசத் தரத்தில் தொழில்நுட்ப நேர்த்தி...
ராஜ் சிவராஜின் நேர்த்தியான கேமரா கோணங்களும், AK கமல் அவர்களின் துடிப்பான Color Grading-உம் மியூசிக் வீடியோவிற்கு சர்வதேச Pop Album தரத்தை கொடுத்துள்ளன. அருண் யோகதாசனின் Crisp படத்தொகுப்பும், S. உஷாந்தின் கலை இயக்கமும் பாடலை எங்கும் தொய்வடையாமல் நகர்த்துகின்றன.
சுயாதீன இசைக் களத்தில் இத்தகைய தைரியமான விழிப்புணர்வுப் படைப்பை தந்துள்ள பூவன் மதீசன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்