Ratsch Productions (Pvt) Ltd தயாரிப்பில், பல்துறைப் படைப்பாளி எரிக் பெர்னாண்டோ (Eric Fernando) இசை, வரிகள் மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய சுயாதீனத் தமிழ் இசைப் படைப்பான ‘PAARI’ அதிகாரப்பூர்வ Music Video தற்போது வெளியாகியுள்ளது.
பாரம்பரிய நடன அசைவுகள், இசை மற்றும் காட்சியமைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘PAARI’, Ratsch Productions மற்றும் Eric Fernando கூட்டணியில் வெளியாகும் மற்றுமொரு Independent Music Project ஆகும்.
‘Naa Oru Maanu’-வைத் தொடர்ந்து ‘PAARI’
Ratsch Productions மற்றும் Eric Fernando கூட்டணியில் முன்னதாக வெளியான ‘Naa Oru Maanu’ பாடல், இயற்கை மற்றும் உயிரினங்களின் வாழ்வியல் சார்ந்த கருத்தை இசையின் வழியாக முன்வைத்திருந்தது.
அந்தப் படைப்பைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைந்துள்ள ‘PAARI’, இந்த முறை பாரம்பரியக் கலை மற்றும் நடனக் கூறுகளுக்கு முக்கியத்துவம் வழங்கிய இசைப் படைப்பாக வெளியாகியுள்ளது.
பாடலின் இசை, வரிகள், இயக்கம், படத்தொகுப்பு, Mixing மற்றும் Production Design உள்ளிட்ட பல்வேறு படைப்புப் பணிகளை Eric Fernando கையாண்டுள்ளார்.
பாரம்பரிய நடனத்துடன் காட்சியமைப்பு
Music Video-வில் Mahisa Chandrasekaran மற்றும் Saju நடனக் கலைஞர்களாக இடம்பெற்றுள்ளனர்.
Sathursan ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளதுடன், Sinx FX உதவி இயக்கம் மற்றும் DI பணிகளை மேற்கொண்டுள்ளார். பாடலுக்கான Orchestration பணிகளை Arosh Camilus மேற்கொண்டுள்ள நிலையில், Dineshanth Mastering செய்துள்ளார்.
‘Naa Oru Maanu’-வைத் தொடர்ந்து Ratsch Productions மற்றும் Eric Fernando கூட்டணியில் உருவாகியுள்ள ‘PAARI’, தற்போது YouTube மற்றும் Digital Music Platforms வாயிலாக ரசிகர்களைச் சந்தித்துள்ளது.
இலங்கைத் தமிழ் இசைக் களத்தில் தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தி வரும் Ratsch Productions மற்றும் கலைஞர் எரிக் பெர்னாண்டோ குழுவினருக்கு Thirai Murasu ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்