THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

‘நா ஒரு மானு’வைத் தொடர்ந்து மீண்டும் இணைந்த Ratsch Productions – Eric Fernando கூட்டணி; ‘பாரி’ பாடலின் அதிகாரப்பூர்வ ப்ரோமோ வெளியானது!

20 Aug, 2026

Ratsch Productions மற்றும் இளம் படைப்பாளி எரிக் பெர்னாண்டோ (Eric Fernando) மீண்டும் இணைந்துள்ள புதிய சுயாதீன இசைப் படைப்பான ‘பாரி’ (PAARI) பாடலின் அதிகாரப்பூர்வ ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


முன்னதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகளின் வாழ்வியல் குறித்து பேசும் ‘நா ஒரு மானு’ (Naa Oru Maanu) பாடலுக்காக இணைந்து பணியாற்றிய இந்தக் கூட்டணி, தற்போது முற்றிலும் மாறுபட்ட காட்சிப் பின்னணியுடன் ‘பாரி’ மூலம் மீண்டும் இணைந்துள்ளது.


மலையகத்தின் இயற்கை அழகுடன் ‘பாரி’


வெளியாகியுள்ள ப்ரோமோவில் அருவிகள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள், மாட்டு வண்டிப் பயணம், கிராமிய நடனங்கள் உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இயற்கை மற்றும் கிராமிய வாழ்வியல் சார்ந்த காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘பாரி’யின் காட்சி வடிவமைப்பு அமைந்துள்ளது.


பாடலுக்கான காட்சிகளை சதுர்ஷன் (Sathursan) ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், Sinx FX வண்ணச் சேர்க்கைப் பணிகளை மேற்கொண்டுள்ளது.


மீண்டும் Eric Fernando – Ratsch Productions


‘நா ஒரு மானு’ பாடலில் கலைஞர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் காட்சி உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்றிருந்த Eric Fernando, ‘பாரி’ படைப்பிலும் முக்கிய படைப்பாற்றல் பங்களிப்பை வழங்கியுள்ளார்.


Ratsch Productions தயாரித்து வழங்கும் இந்தப் புதிய பாடல், ‘நா ஒரு மானு’வுக்குப் பின்னர் இக்கூட்டணியில் உருவாகும் அடுத்த படைப்பாக அமைந்துள்ளது.


ஆகஸ்ட் 26 முழுப் பாடல் வெளியீடு


ப்ரோமோவைத் தொடர்ந்து ‘பாரி’ முழுமையான மியூசிக் வீடியோ ஆகஸ்ட் 26 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.


‘நா ஒரு மானு’வைத் தொடர்ந்து புதிய களத்தில் மீண்டும் இணைந்துள்ள Ratsch Productions, Eric Fernando மற்றும் ‘பாரி’ குழுவினருக்கு Thirai Murasu குழுவின் வாழ்த்துக்கள்.

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்