இலங்கைத் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பிரவீன் கிருஷ்ணராஜா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், புதிய திரைப்படமான ‘#PK6’-இன் First Look போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ‘TVK’ திரைப்படத்தைத் தொடர்ந்து அவரது 6-வது படைப்பாக உருவாகும் இந்தத் திரைப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தப் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிறந்தநாளில் வெளியான காலப்பயண அறிவிப்பு…
“மித மிஞ்சிய காலப்பயணமும் ஆரம்பம் 🕰️✨” என்ற வரிகளுடன் பிரம்மாண்டமான Time Portal கொண்ட போஸ்டர் இன்று (ஆகஸ்ட் 07) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. “A STORY THAT CHOOSES. A LIFE THAT BREAKS.” என்ற அழுத்தமான வரிகளுடன் உருவாகும் இந்தத் திரைப்படம் இலங்கைத் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அறிவியல் புனைகதை (Sci-Fi Time Travel) முயற்சியாக அமையவுள்ளது. Windsor Productions மற்றும் PK Entertainment தயாரிப்பில் பிரவீன் கிருஷ்ணராஜாவே கதை எழுதி இயக்குகிறார்.
இரட்டிப்பு மகிழ்ச்சியில் ரசிகர்கள்…
இன்று பிறந்தநாள் காணும் இயக்குநர் பிரவீன் கிருஷ்ணராஜாவிற்கு திரை பிரபலங்களும் சினிமா பிரியர்களும் ரசிகர்களும் தங்களது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் அதேவேளையில், வெளியான புதிய போஸ்டருக்கும் சமூக வலைத்தளங்களில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
பிறந்தநாள் வாழ்த்துகளுடன் ‘#PK6’ வெற்றிபெற இயக்குநர் பிரவீன் கிருஷ்ணராஜாவிற்கு Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்