THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

`பொய்யின் திரையைக் கிழிக்கும் உண்மை!` — வணக்க லங்கா யூடியூப் தளத்தில் ஜூலை 25 அன்று வெளியாகிறது `பொய் அல்ல நிஜம்`!

21 Jul, 2026

இலங்கை தமிழ் சுயாதீன திரைத்துறையில் ஏற்கனவே தன் டீசரால் கவனம் ஈர்த்த 'பொய் அல்ல நிஜம்' குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25 ஆம் திகதி வணக்கம் லங்கா YouTube தளத்தில் இந்தப் படம் வெளியாகும் என படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.


வணக்கம் லங்கா மற்றும் கோமாளி ஸ்டார்ஸ் கூட்டுத் தயாரிப்பு...

வணக்கம் லங்கா மற்றும் கோமாளி ஸ்டார்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தக் குறுந்திரைப்படத்தை ETP. சரூபன்.S எழுதி இயக்கியுள்ளார். உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான முரண்பாட்டையும் மோதலையும் அடிப்படையாக கொண்டு முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் இந்தப் படம் செதுக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே வெளியான டீசர் உறுதிப்படுத்தியுள்ளது.


நடிகர்கள் & படைப்பில் பங்களித்தவர்கள்...

கனிஷ் மற்றும் தினு ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் மூத்த மற்றும் இளம் கலைஞர்களின் கூட்டணியும் இணைந்துள்ளது. காட்சி வடிவமைப்பு — வினோசியன், ஹுஸ்னி, ஆஷிப் K.S, நிதுஷன் K.S, ஒளிப்பதிவு — யது K.K.S, இசை — தர்மேஷ், லதுஷா, தரன்.


'பொய் அல்ல நிஜம்' படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஜூலை 25 ஆம் திகதிக்காக காத்திருங்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்