THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

ரசிகர்களின் பலத்த வரவேற்புடன் வெளியானது `பொய் அல்ல நிஜம்` திரைப்படத்தின் பிரம்மாண்ட டீசர்!

03 Jul, 2026

வணக்கம் லங்கா மற்றும் கோமாளி ஸ்டார்ஸ் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் "பொய் அல்ல நிஜம்" திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தற்போது சினிமா ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களிடையே இந்த டீசர் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


கதை என்ன?...

உண்மை மற்றும் பொய்யின் மோதலை அடிப்படையாகக் கொண்டு, முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இந்தத் திரைப்படம் செதுக்கப்பட்டுள்ளது என்பதை வெளியான டீசர் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கைத் தமிழ்த் திரைத்துறையில் ஒரு தரமான படைப்பாக இந்தத் திரைப்படம் வரவிருக்கிறது என்பதை டீசரிலேயே உணர முடிகிறது.


இயக்குநர் & நடிகர்கள்...

ஈடிபி. சரூபன்.S அவர்களின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தில் கனிஷ் மற்றும் தினு முன்னணி நடிப்பில் களமிறங்கியுள்ளனர். மூத்த மற்றும் இளம் கலைஞர்களின் கூட்டணியில் இப்படம் தயாராகி வருவது மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.


படைப்பில் பங்களித்தவர்கள்...

காட்சி வடிவமைப்பு — வினோசியன், ஹுஸ்னி, ஆஷிப் K.S, நிதுஷன் K.S, ஒளிப்பதிவு — யது K.K.S, இசை — தர்மேஷ், லதுஷா, தரன்.


"பொய் அல்ல நிஜம்" படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்தத் திரைப்படம் வெற்றிகரமாக வெளியாகட்டும்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்