THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

“ஃபுட்போல் வெறும் விளையாட்டில்ல… அது எங்கட வாழ்க்கை!” — யாழ்ப்பாண வாழ்வியலோடு வெளியான ‘போராட்டம்’

02 Sep, 2026

IBC Tamil Productions தயாரிப்பில், பாஸ்கரன் கந்தையா (Baskaran Kandiah) வழங்க, ராஜ் சிவராஜ் (Raj Sivaraj) எழுதி இயக்கியுள்ள ‘போராட்டம் (Porattam)’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ Trailer இன்று வெளியாகியுள்ளது.

கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தின் கதைக்களம், ஒரு இளைஞனின் விளையாட்டுக் கனவுடன் மட்டுமல்லாமல் அவனைச் சுற்றியுள்ள குடும்பம், காதல், நட்பு, பொருளாதாரச் சவால்கள் மற்றும் வாழ்வியல் போராட்டங்களையும் இணைத்து நகரும் என்பதை Trailer வெளிப்படுத்துகிறது.

கனவுக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான ‘போராட்டம்’

கால்பந்தாட்டத்தை தங்களது வாழ்க்கையின் ஓர் அங்கமாகக் கருதும் இளைஞர்களின் எண்ணங்களை முன்வைக்கும் வசனங்களுடன் Trailer தொடங்குகிறது.

“எங்களை மாதிரி மக்களை விளையாட்டும் கலையும்தான் உலகம் முழுக்க அடையாளப்படுத்தும்” என்ற கருத்து, திரைப்படம் பேசவிருக்கும் மையப் பார்வையை வெளிப்படுத்துகிறது.

மிலர் என்ற இளம் கால்பந்து வீரனின் பயணத்தைச் சுற்றி கதை நகர்வதாக Trailer உணர்த்துகிறது. கால்பந்து மைதானத்தில் தனது இலக்கை நோக்கிச் செல்லும் அவனது பயணத்துடன், கடலோர வாழ்க்கை, குடும்பத்தின் பொருளாதார நிலை, உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவன் எதிர்கொள்ளும் தடைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

ரீகன் கந்தையா – நிவேதிகா

முதன்மைக் கதாபாத்திரத்தில் ரீகன் கந்தையா (Reegan Kandiah) கால்பந்து வீரராக நடித்துள்ளார். அவருடன் நிவேதிகா (Nivedhikah) முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Trailer-ல் இருவருக்கிடையிலான காதல் தருணங்களுடன், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகளுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கதையின் பின்னர் உருவாகும் மோதல்களை சுட்டிக்காட்டும் வகையில் இடம்பெறும்

“பெயர் வேணும்னா உங்கடதா இருக்கலாம்… ஆனா நிலம் எப்பவுமே எங்கடதான்!”

என்ற வசனமும் Trailer-ன் கவனிக்கத்தக்க பகுதிகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் கடலோரமும் கால்பந்து மைதானமும்

AK Kamal மேற்கொண்டுள்ள ஒளிப்பதிவில் கடலோரப் பகுதிகள், கால்பந்து மைதானங்கள் மற்றும் கதாபாத்திரங்களின் வாழ்வியல் சூழல்கள் முக்கியமாகப் பதிவாகியுள்ளன.

Poovan Matheesan இசையமைத்துள்ள நிலையில், Trailer-ன் உணர்வு மற்றும் விளையாட்டு சார்ந்த காட்சிகளுக்கு பின்னணி இசை துணை நிற்கிறது.

Arun N Yogathasan படத்தொகுப்பையும், S. Gobithan கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

அடுத்ததாக இசை வெளியீட்டு விழா

முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, ‘போராட்டம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டெம்பர் 12 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து திரைப்படம் அக்டோபர் 02, 2026 முதல் உலகளாவிய திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Trailer வெளியீட்டுடன் ‘போராட்டம்’ திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை நோக்கிய அடுத்தகட்ட promotional பயணம் தற்போது தொடங்கியுள்ளது.


‘போராட்டம்’ திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை நோக்கிய பயணம் சிறப்பாக அமைய, ராஜ் சிவராஜ் தலைமையிலான படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!


கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்