இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ராவணன்' திரைப்படத்தின் நினைவில் நிற்கும் பாடல் காட்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'ராவணன் காதல்' (Raavanan Kadhal) Recreation Promo அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
இயக்குநர் வினோ த்ரோன் (Vino Throne) உருவாக்கியுள்ள இந்த படைப்பு, 'உசுரே போகுதே...' பாடலின் காட்சியமைப்பை மறுஉருவாக்கம் செய்யும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த அருவி மற்றும் காட்டுச் சுனை பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த புரோமோ, அசல் திரைப்படத்தின் காட்சித் தன்மையை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காட்சியமைப்பில் இயற்கையின் அழகும் சினிமா மொழியும்
அருவி, பாறை அமைப்புகள் மற்றும் இயற்கை ஒளியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள காட்சிகள், Recreation முயற்சியின் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றன.
தொழில்நுட்ப அம்சங்கள்
இந்த Recreation Promo-வை வினோ த்ரோன் படமாக்கி, படத்தொகுப்பு செய்துள்ளார்.
கதாபாத்திரங்களின் தோற்றத்திற்கு தேவையான ஒப்பனைப் பணிகளை AJ Makeup Studio மேற்கொண்டுள்ளது. குறிப்பாக நீரில் நனைந்த தோற்றம், முகபாவனைகள் மற்றும் காயங்களின் வடிவமைப்பு ஆகியவை காட்சிகளின் யதார்த்த உணர்வை வலுப்படுத்துகின்றன.
படக்குழுவின் தகவலின்படி, இது முழுமையான Recreation Video-விற்கான முன்னோட்டமாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், முழு வீடியோ விரைவில் வெளியாகவுள்ளது.
மணிரத்னத்தின் பிரம்மாண்டக் காட்சியமைப்பைத் தங்களது அசைக்க முடியாத உழைப்பால் மறுஉருவாக்கம் செய்துள்ள இயக்குநர் வினோ த்ரோன், அசோக் திலீப், தக்ஷிகா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்