THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

4 மொழிகளில் திரைக்கு வரும் பிரம்மாண்டப் படைப்பு!” — அன்ரன் ஒனாசியஸ் பெர்னாண்டோவின் ‘RAITHA’ டீசர் செப்டம்பர் 8 வெளியாகிறது!

25 Aug, 2026

இந்தியா – இலங்கை கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்பில், Nitwo Pictures, May 7 மற்றும் ONASIUS நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய முழுநீளத் திரைப்படமான ‘RAITHA – LIMITED EDITION’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் செப்டம்பர் 08, 2026 அன்று வெளியாகவுள்ளது.

அன்ரன் ஒனாசியஸ் பெர்னாண்டோ (Anton Onasius Fernando) எழுதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் ஏற்கனவே முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தொகுப்பு உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து வெளியாகியுள்ள புதிய Teaser Announcement Poster, ‘RAITHA’ மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

4 மொழிகளில் உருவாகும் ‘RAITHA’

“Leaders are made, not born” என்ற அழுத்தமான Tagline-உடன் உருவாகும் ‘RAITHA’, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் பார்வையாளர்களைச் சென்றடையத் தயாராகிறது.

குடும்ப உறவுகள், உணர்வுகள், ஆக்‌ஷன் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை இணைத்த முழுநீளத் திரைப்படமாக உருவாகும் இப்படம், Dolby Atmos ஒலி வடிவமைப்பு மற்றும் 35MM Visual Presentation உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களுடனும் தயாராகி வருகிறது.

ரோனி தலைமையிலான நட்சத்திரக் கூட்டணி

‘RAITHA’ திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரத்தில் ரோனி (Rony) நடித்துள்ளார்.

அவருடன் சௌமியா (Sawmiya), கவியா (Kaviya), இந்திரா ராஜேந்திரன் (Indra Rajendran), லீலா (Leela), நீல் ரெக்சன் (Niel Rexon), சிபி (Sibi), ஐஜித் (Aijith), உதயா (Udhaya), திவியன் (Thiviyan) உள்ளிட்ட இந்தியா – இலங்கை கலைஞர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

முன்னதாக வெளியான போஸ்டர்களில் ரோனியின் தீவிரமான தோற்றமும், படத்தின் “Leaders are made, not born” என்ற மைய வாசகமும் கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகவுள்ள டீசர் கதைக்களத்தின் முதல் முக்கியமான காட்சிப் பார்வையை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது.

தொழில்நுட்பக் கூட்டணி

வினோத்ரோன் (Vinothrone) ஒளிப்பதிவைக் கையாள, ஜெயகிருஷ்ணா (Jayakrishna) படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஹரிஹரன் (Hariharan) கலை இயக்கத்தைக் கவனிக்கிறார்.

Promo நிகழ்வுகளை Arosh ஒருங்கிணைக்க, Promo Editing பணிகளை Thivi மேற்கொண்டுள்ளார்.


படப்பிடிப்பு நிறைவு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் அப்டேட்டைத் தொடர்ந்து தற்போது டீசர் வெளியீட்டை நோக்கி நகர்ந்துள்ள ‘RAITHA – LIMITED EDITION’ திரைப்படக் குழுவினருக்கு Thirai Murasu ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!




கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்