Nitwo Pictures மற்றும் ONASIUS தயாரிப்பில், Anton Onasius Fernando எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படமான ‘ரைதா (RAITHA)’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் PURE CINEMA YouTube தளத்தில் வெளியாகியுள்ளது.
வழக்கமான திரைப்பட டீசர் வடிவிலிருந்து சற்று மாறுபட்டு, ஒரு திரைப்பட audition சூழலை மையமாகக் கொண்டு நகைச்சுவை, நையாண்டி மற்றும் புதிரான கதைசொல்லலுடன் ‘ரைதா’வின் உலகத்தை அறிமுகப்படுத்துகிறது.
“லவ் ஃபெயிலியர்… நீங்க என்ன பண்ணுவீங்க?”
ஒரு திரைப்படத்தின் இறுதி audition-க்கு வரும் இளைஞர்களிடம்,
“ஒரு பையன் ஒரு பொண்ணை உயிரா காதலிக்கிறான்… அந்தப் பொண்ணு காதலை வேணாம்னு சொல்லிடுறா… Love Failure… நீங்க என்ன பண்ணுவீங்க?”
என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
அதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு பதில்களை வழங்க, இறுதியில் Rony ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் இயல்பான பதில் காட்சியின் tone-ஐ மாற்றுகிறது.
இந்த audition sequence முழுவதும் நகைச்சுவை போக்கில் நகர்ந்தாலும், அதன் பின்னால் திரைப்படத்தின் உண்மையான கதைக்களம் என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை டீசர் திறந்தே விடுகிறது.
‘ரைதா’ என்ற தலைப்பின் நையாண்டி
டீசரின் இறுதிப்பகுதியில் தயிர், வெங்காயம், தக்காளி உள்ளிட்டவற்றைக் கொண்டு ரைதா தயாரிக்கும் காட்சி இடம்பெறுவதுடன், அதனுடன் திரைப்படத்தின் தலைப்பும் இணைக்கப்படுகிறது.
இந்த title reveal, படத்தின் கதையையும் அதன் பெயரையும் நேரடியாக வெளிப்படுத்தாமல் நையாண்டியான முறையில் அறிமுகப்படுத்தும் முயற்சியாக அமைந்துள்ளது.
2027 உலகளாவிய வெளியீடு
முன்னதாக வெளியான ‘ரைதா’ production updates-ல் படப்பிடிப்பு நிறைவடைந்து post-production பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் உட்பட பல மொழிகளில் பார்வையாளர்களைச் சந்திக்கும் நோக்கில் உருவாகும் இப்படம் 2027-ஆம் ஆண்டு உலகளாவிய திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான teaser presentation மூலம் தனது அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்கியுள்ள ‘ரைதா’ திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்