THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

`உன்ன மட்டும் நெஞ்சம் கெஞ்சுமா...!` — ஸ்ரீதர் சேனாவின் மயக்கும் குரலில் யுக்தா புரோடக்‌ஷனின் `ரஞ்சமா` இப்போது வெளியாகியுள்ளது!

17 Jul, 2026

யுக்தா புரோடக்‌ஷன் நிறுவனம் மீண்டும் ஒரு இதயத்தை தொடும் படைப்புடன் வருகிறது. "ரஞ்சமா" மியூசிக் வீடியோ இப்போது வெளியாகி ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்து வருகிறது. காதலும் பிரிவும் கலந்த இந்த உணர்ச்சிப்பூர்வமான படைப்பு, பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்கள் காதல் நினைவுகளுக்கு அழைத்துச் செல்கிறது.


மனதை உருக்கும் காவியம்...

"ரஞ்சமா எந்தன் ரஞ்சமா உன்ன மட்டும் நெஞ்சம் கெஞ்சுமா... நீ இல்லா என்னில் எதுவும் மிஞ்சுமா..." என தொடங்கும் இந்தப் பாடல் ஒரு ஆழமான காதல் மற்றும் பிரிவின் வலியை காட்சிப் பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. "சிறை பிடித்து ரசிப்பதிலே காதல் இல்லை... அதை பறக்க மகிழ்வதிலே ஏதும் இல்லை..." என்ற வரிகளும் பாடலின் இறுதியில் வரும் மர்மமான திருப்பமும் பார்ப்பவர்களின் மனதை கனக்க வைக்கின்றன.


ஸ்ரீதர் சேனா & மானஸி — வசீகரக் குரல்கள்...

பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீதர் சேனா மற்றும் மானஸி ஜி கண்ணன் ஆகியோரின் மயக்கும் குரல்களில் பிரசாந்த் கிருஷ்ணபிள்ளையின் ஆன்மாவை தொடும் மெலடி இசை பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. இயக்குநர் வின்னிதனின் நேர்த்தியான எழுத்து மற்றும் இயக்கத்தில் நெவிலின் எழில் கொஞ்சும் இயற்கை ஒளிப்பதிவும் நிவேனின் Color Grading-உம் பாடலை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தியுள்ளன. கிங் கஜன் மற்றும் கீர்த்தி ஆகியோர் தங்களின் எதார்த்தமான நடிப்பின் மூலம் கதாபாத்திரங்களுக்கு முழு உயிர் கொடுத்துள்ளனர்.


இந்த உன்னதமான படைப்பிற்காக உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்