இலங்கைத் தமிழ் சினிமா, இசை மற்றும் கலைஞர்களை சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்தும் நோக்குடன் இயங்கி வரும் முன்னணி ஊடக அமைப்பான Chilli Chips, தனது புதிய தயாரிப்பான 'ரெமோ நிஷா' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ First Look போஸ்டரை வெளியிட்டுள்ளது. நடிகையும் மாடலுமான ரெமோ நிஷா அவர்களே இந்தப் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளார். வெளியான சில நேரத்திலேயே இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
காமெடி, காதல் நிறைந்த பயணம்...
"Get Ready for Love & Laughter!" என்ற சுவாரஸ்யமான தலைவரியுடன் தயாராகியுள்ள இந்தத் திரைப்படம், காமெடி, காதல் மற்றும் குடும்பக் கொண்டாட்டப் பின்னணியில் உருவாகியுள்ளது. மட்டக்களப்பிலிருந்து உலகளாவிய தமிழ் மக்களுக்கு இலங்கையின் கலைப் படைப்புகளை கொண்டு சேர்க்கும் Chilli Chips நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படைப்பில் பங்களித்தவர்கள்...
தயாரிப்பு & கதை — SN விஷ்ணுஜன், இயக்கம் — ஹரிசாந்த், திரைக்கதை & வசனம் — Chilli Chips, ஒளிப்பதிவு — அஜிந்திர பிரசாத், படத்தொகுப்பு — தினு மகேந்திரன், இசை — G. வித்யாரூபன், Sound Design, SFX, Mix & Master — AJ ஷங்கர்ஜன், DI Colourist — B. அஜிந்திரபிரசாத், பாடலாசிரியர் — அருண் மாயு, பின்னணிப் பாடகர் — ஜூட் பிரியதர்ஷன், Dubbing — AJS Studio / TNS Studio (TN சதீஷ், தினு மகேந்திரன், ஜெயவரதராஜன்), Creative Head — தினு மகேந்திரன்.
நடிகர்கள்...
கண்டீபன் T, நவேஸ்கர் (சிவா), T.S. தனுஷ், ஹரிணி, K. ஸ்ரீபாஸ்கரன், ஹரிசாந்த், சரவணா, A. அஷ்வின் ஆகியோர் நடித்துள்ளனர்.
இயக்குநர் ஹரிசாந்த், தயாரிப்பாளர் SN விஷ்ணுஜன் மற்றும் 'ரெமோ நிஷா' படக்குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்