THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

சாளம்பை நெடு வேலனே பாடல் இப்போது வெளியாகியுள்ளது! அனுராதா ஸ்ரீராம் குரலில் மல்லாகம் முருகனை போற்றும் பக்திப் பாடல்!

04 Jun, 2026

நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் பக்தர்களின் நம்பிக்கையின் சின்னமாக விளங்கும் அருள்மிகு மல்லாகம் சாளம்பை முருகமூர்த்தி கோயிலின் மகிமையைப் போற்றும் "சாளம்பை நெடு வேலனே" என்ற பக்திப் பாடல், Karthi Studio யூடியூப் தளத்தின் வழியாக இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலின் வெளியீட்டு விழா சாளம்பை முருகன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.


புனித தலத்தின் சிறப்பு...

மூலவராக வேல்பெருமானை கொண்ட இந்த அற்புத திருத்தலம் சாதாரண கோயில் அல்ல. மூலஸ்தானத்தில் இருக்கும் வேலும் சாதாரண வேல் அல்ல — கதிர்காம கந்தனே கொடுத்தனுப்பிய தங்கவேல் அது. நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் முருகப்பெருமானின் அருள்நிலையமாக விளங்கும் இந்தத் திருத்தலத்தின் மகிமையை, வேல்பெருமானின் தரிசனத்தையும் கோயிலின் எழில் தோற்றத்தையும் இந்தப் பாடல் அழகாக சித்தரிக்கிறது.


இசையமைப்பாளர் தர்மேஷின் சிறப்பான படைப்பு...

இளம் இசையமைப்பாளர் தர்மேஷின் இசைப் பயணத்தில் மிகவும் சிறப்பான படைப்பாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் மகிமை, கருணை மற்றும் அருளை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இந்தப் பக்திப் பாடல், கேட்பவர்கள் மனதில் ஆழமான பக்தி உணர்வை விதைக்கும் வகையில் அமைந்துள்ளது.


அனுராதா ஸ்ரீராம் குரலில் தனி சிறப்பு...

இந்தப் பாடலுக்கு மேலும் பெருமை சேர்த்தவர் இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம். அவரது இனிமையான குரலில் முருகப்பெருமானின் பெருமையை போற்றும் இந்தப் பாடல் ஒலிப்பதனால், இது ஒரு தனிச்சிறப்பான படைப்பாக மாறியுள்ளது.


படைப்பின் முழு விவரங்கள்...

இந்தப் பாடலை உருவாக்கியதில் பல திறமையான கலைஞர்களின் பங்களிப்பு உள்ளது.

தயாரிப்பு — டினேஸ்காந்த் ரகுநாதன், இசையமைப்பு — கார்த்தி (தர்மேஷ் ரகு), பாடல் — அனுராதா ஸ்ரீராம், பாடல் வரிகள் — அருண் RN, தாளவாத்தியம் — டெரிக் (இந்தியா), வீணை — வாகீசன், புல்லாங்குழல் — சாதிஸ் (இந்தியா), குரல் ஒலிப்பதிவு — சுந்தர் (John Studio, இந்தியா), ஒருங்கிணைப்பு — அரவிந்த் பாபு (இந்தியா), கலவை & தேர்த்தெடுப்பு — பத்மயன் சிவா, காட்சி தொகுப்பு — உமாதேவன் மதிவர்மன் (ZeroShade Studio).


பின்னணியில் இருந்த அன்பான கரங்கள்...

இந்தப் பாடலை உருவாக்குவதற்காக தர்மேஷுக்கு பக்க பலமாக நின்றவர்கள் பலர். டினேஸ்காந்தும், நெருங்கிய நண்பர்களான ஜருஸ்மன் மற்றும் குயின்சனும் எல்லா நேரத்திலும் ஆதரவாக இருந்தனர். இந்தியா சென்று ஒலிப்பதிவு செய்வதற்கும் பாடலை மேலும் அழகாக்குவதற்கும் பத்மயன் சிவா  பெரிதும் உதவியாக இருந்தார் என தர்மேஷ் மனமார்ந்த நன்றியுடன் தெரிவித்துள்ளார்.


ரசிகர்களுக்கு வேண்டுகோள்...

"சாளம்பை நெடு வேலனே" பாடலை Karthi Studio யூடியூப் தளத்தில் ஒருமுறை கேட்டுப் பாருங்கள். கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள், அதிகமாக பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் ஆதரவும் அன்பும் தர்மேஷின் அடுத்தடுத்த படைப்புகளுக்கு உற்சாகமாக அமையும்.


இசையமைப்பாளர் தர்மேஷுக்கும் இந்தப் படைப்பில் பங்களித்த அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த பக்திப் பாடல் முருக பக்தர்கள் அனைவரின் மனதையும் கவரட்டும், சாளம்பை வேல்முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்