THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

`வாடி வாடி சைத்தான் பேபி நீ போதையை ஏத்தும் ஓரக்கண்ணால...` — குத்து ராப் கலவையில் `சைத்தான் பேபி` இப்போது வெளியீடு!

13 Jul, 2026

சுயாதீன தமிழ் இசைத்துறையில் புதிய அலை எழுப்பும் கலைஞர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள "சைத்தான் பேபி" மியூசிக் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. KJ Music Studio தயாரிப்பில் உருவான இந்தப் பாடல், குத்து மற்றும் ராப் இசையின் அசத்தலான கலவையாக ரசிகர்களை கட்டிப்போடுகிறது.


குறும்புத்தனமான காதலும் துள்ளலான இசையும்...

"வாடி வாடி சைத்தான் பேபி நீ போதையை ஏத்தும் ஓரக்கண்ணால..." என தொடங்கும் இந்தப் பாடல், முற்றிலும் புதிய பொழுதுபோக்கு வடிவத்தில் குறும்புத்தனம் நிறைந்த காதல் மோதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. "அட கடக்கிற ரயிலா நீ இறையிலிக்கிற புயலா... உயிர் துடிக்கிற கருவா நீ இடிக்கிற மலையா..." என வரும் வேகமான ராப் வரிகளும் அதற்கு ஈடுகொடுக்கும் நடன அசைவுகளும் பாடலின் விறுவிறுப்பை பலமடங்கு உயர்த்துகின்றன.


இசை & காட்சி அமைப்பு...

இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனின் கச்சிதமான மெலடியும் அதிரடித் தாளங்களும் கலந்த இசை, பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. கானா திலக்ஷன் மற்றும் துபியின் வசீகரமான குரல்கள் பாடலுக்கு கூடுதல் Energy கொடுத்துள்ளன. இயக்குநர் பாப் வாசியின் இயக்கத்தில் M.C.A தேனுஷனின் நேர்த்தியான ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் பாடலை வண்ணமயமாக உருவாக்கியுள்ளன. தீப்தி டான்ஸ் குரூப் மற்றும் மை லைஃப் டான்சிங் குரூப் ஆகியோரின் நடன அசைவுகள் பார்ப்பவர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.


சுயாதீன தமிழ் இசைத்துறையில் புதிய முயற்சியான "சைத்தான் பேபி" மூலம் கவனம் ஈர்த்துள்ள ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் Thirai Murasu குழுவின் வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்