THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

143 சர்வதேச விருதுகள்! — `சாவடி` திரைப்படத்தின் வரலாற்றுச் சாதனை கொண்டாட்டமும் `துவக்கு` டீசர் வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது!

11 Jul, 2026

இலங்கைத் தமிழ் சினிமாவில் ஒரு வரலாற்று பக்கம் எழுதப்பட்டுள்ளது. தேவா சினி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான தேவா அலோசியஸ் தயாரிப்பில் உருவான 25ஆவது திரைப்படமான 'சாவடி' — இலங்கையில் 16 திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டு, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு இதுவரை 143 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இந்த சாதனை இலங்கைத் தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஒரு பொற்பக்கமாக திகழ்கிறது.

சாதனையை கொண்டாடிய விருது விழா...

இந்த வரலாற்றுச் சாதனையை கொண்டாடும் வகையில், 'சாவடி' திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா ஜூலை 11 ஆம் தேதி மட்டக்களப்பு PCA Cine Max திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், கலைஞர்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான சினிமா ரசிகர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

'துவக்கு' டீசர் — புதிய எதிர்பார்ப்பு...

விழாவின் மற்றொரு சிறப்பான தருணமாக, தேவா அலோசியஸ் இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த முழுநீள திரைப்படமான 'துவக்கு'-வின் முன்னோட்டம் அதே மேடையில் வெளியிடப்பட்டது. 'சாவடி' படைத்த சாதனையை தொடர்ந்து 'துவக்கு'வும் புதிய உயரங்களை தொடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

'சாவடி' படக்குழுவினர் அனைவருக்கும் இந்த பெரும் சாதனைக்காக ThiraiMurasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 'துவக்கு' திரைப்படமும் வெற்றிகரமாக வரட்டும்!










கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்