இலங்கை சினிமாத்துறையில் பணியாற்றி வரும் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது விபரங்களை ஒரே டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்து அடையாளப்படுத்திக் கொள்வதற்கான புதிய முயற்சியாக ‘SL Cinema’ இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், படத்தொகுப்பாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட சினிமாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களது விபரங்களை இந்தத் தளத்தில் பதிவு செய்துகொள்ள முடியும்.
படைப்பாளிகளை இணைக்கும் முயற்சி
திரைத்துறையில் ஏற்கனவே பணியாற்றி வருபவர்கள் மட்டுமன்றி, புதிதாக சினிமாவில் தங்களை அடையாளப்படுத்த விரும்பும் படைப்பாளிகளும் இதில் பதிவு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் திரைத்துறை சார்ந்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விபரங்களை ஒரே இடத்தில் தொகுத்து, எதிர்காலத் திரைப்பட மற்றும் படைப்புத் திட்டங்களுக்கான தொடர்புகளை எளிதாக்குவது இந்த முயற்சியின் நோக்கமாக அமைந்துள்ளது.
“இலங்கை சினிமாவில் நீங்களும் உங்களை அடையாளப்படுத்துங்கள்! கொஞ்சம் நேரம் ஒதுக்கி வலைத்தளத்தில் உங்கள் பதிவை செய்யுங்கள்” என SL Cinema சார்பில் படைப்பாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
SL Cinema முன்னெடுத்துள்ள இந்த புதிய டிஜிட்டல் முயற்சிக்கு Thirai Murasu ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்